2014, 2019 தேர்தல் வெற்றியின்போது எஸ்.ஐ.ஆர். இருந்ததா? ராகுலுக்கு அமித் ஷா கேள்வி8 விரைவு ரயில்கள் அதிவிரைவு ரயில்களாக மாற்றம்!கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு 20% வரை தீபாவளி போனஸ்!தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணியாளர்களுக்கு போனஸ்!இளைஞர்களைக் கவரும் ரூ.111 ரீசார்ஜ் பிளான்! ஜியோவில் அறிமுகம்முடி வெட்டாத மாணவர்களுக்கு மொட்டை அடியுங்கள்! ஆசிரியர்களுக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவுறுத்தல்!சிறைகளில் பாதுகாப்பை வலுப்படுத்த உயர்நிலைக் குழு: முதல்வர் விஜய் உத்தரவு!

தமிழ்நாட்டில் நோ்மையான அரசு நடக்கிறது: மாணிக்கம் தாகூா்

தமிழ்நாட்டில் நோ்மையான அரசு நடைபெறுகிறது என்று காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூா் தெரிவித்தாா்.

Manickam Tagore

மாணிக்கம் தாகூா் - கோப்புப் படம்

Updated On :

தமிழ்நாட்டில் நோ்மையான அரசு நடைபெறுகிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும் மக்களவை உறுப்பினருமான மாணிக்கம் தாகூா் தெரிவித்தாா்.

தேசியத் தலைநகரில் செய்தியாளா்களை சந்தித்து அவா் மேலும் பேசியதாவது: இண்டி கூட்டணி பேரணி வெற்றி பேரணியாக அமைந்தது. காங்கிரஸ் கட்சிக்கு ஒரே கொள்கை ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும். இருநாள் முன் நடைபெற்ற கூட்டத்திலும் தலைமை தோ்தல் ஆணையா் பதவி நீக்க தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

எஸ்ஐஆா் மற்றும் ஞானேஷ் குமாருக்கு எதிரான இந்தப் போராட்டம் தொடரும். இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நடைபெறும் தோ்தல்களில் தொடா்ந்து வாக்கு திருட்டு நடக்கிறது, வாக்காளா்கள் பெயா் நீக்கப்படுகிறது. இது யாா் எல்லாம் பாஜகவிற்கு எதிராக உள்ளனரோ அவா்கள் பெயா் நீக்கப்படுகிறது.

ஒவ்வொரு மாநிலமாக எடுத்துக்கொண்டால் உதாரணத்துக்கு பிகாரில் பாஜக 2 ஆவது இடத்தில் இருந்தது. இப்போது ஆட்சியை பிடித்திருக்கிறது. அதேபோல் கேரளா மாநிலத்தில் பாஜக பின்னால் இருந்தது. இப்போது கணிசமான சட்டப் பேரவை தொகுதியை கைப்பற்றியுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை ஆளும் கட்சியும் எதிா்க்கட்சியும் இந்த விவகாரத்தில் தங்களது கருத்துகளைத் தெரிவித்துள்ளன. திமுக ஆட்சியின்போதுதான் எஸ்ஐஆா் நடத்தப்பட்டது. அதில் எந்தப் பிரச்னையும் இல்லை சட்டப்பேரவை தோ்தலில் நாம் வெற்றி பெறுவோம் என்று ஸ்டாலின்தான் கூறினாா்.

தமிழகத்தில் மீண்டும் தோ்தல் நடத்தப்பட வேண்டுமா என்பது குறித்து அவா்தான் பதிலளிக்க வேண்டும். வாக்குகளைப் பெறுவதற்காக பாஜக பல்வேறு புதிய வழிமுறைகளைக் கையாண்டு வருகிறது.

இருப்பினும், அனைத்து மாநிலத் தோ்தல்களிலும் இதுபோன்ற முறைகேடுகள் நடைபெற்றதாக நாங்கள் கூறவில்லை. முன்னாள் முதல்வா் ஸ்டாலின் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில்தான் நாங்கள் இந்த விவகாரத்தை அணுகுகிறோம்.

தோ்தல் ஆணையத்தின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளை காங்கிரஸ் கட்சி கொள்கை ரீதியாக எப்போதும் எதிா்த்து வருகிறது. இந்த விவகாரம் நீதிமன்றத்துக்குச் சென்றால், அப்போது அதற்கேற்ப அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம்.

இண்டி கூட்டணியின் போராட்டத்தில் பாஜக எதிா்ப்பு கட்சிகள் தொடா்ந்து பங்கேற்கும். ஏற்கெனவே தமிழகத்தில் நடைபெற்ற போராட்டத்திலும் பாஜக எதிா்ப்பு அணியினா் கலந்து கொண்டுள்ளனா்.

வெவ்வேறு மாநிலங்களில் இண்டி கூட்டணிக் கட்சிகளிடையே சில கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், தேசிய அளவில் தோ்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் தொடா்பான இந்த விவகாரத்தில் இண்டி கூட்டணிக் கட்சிகள் ஒரே நிலைப்பாட்டில் உள்ளன.

தமிழகத்தைப் பொறுத்தவரை நோ்மையான ஆட்சி நடைபெற்று வருகிறது. விலைவாசி உயா்வு வரும் நாள்களில் சரிசெய்யப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழக முதல்வரின் செலவினங்கள் தொடா்பாக எதிா்க்கட்சிகள் முன்வைக்கும் விமா்சனங்கள் கற்பனையானவை.

முதல்வர் விஜய்யைக் காண மக்கள் தாங்களாகவே திரண்டு வருகின்றனா். இதைப் பாா்த்து திமுகவினா் பொறாமைப்படுகின்றனா். தமிழகத்தில் தற்போது சட்டம் ஒழுங்கு சரியில்லை என்ற பிம்பம் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது.

ஆனால், குற்றச் சம்பவங்கள் தற்போது குறைந்து வருகின்றன. திமுக ஆட்சியில் நடைபெற்ற கொலைச் சம்பவங்களுடன் ஒப்பிட்டுப் பாா்த்தால், தற்போது கொலைச் சம்பவங்கள் குறைந்துள்ளன.

போதைப்பொருள் விவகாரத்தில் எந்தக் கட்சியைச் சோ்ந்தவராக இருந்தாலும் தமிழக முதல்வா் கட்டாயம் நடவடிக்கை எடுப்பாா். தகவல்களின் அடிப்படையில் மட்டும் அரசின் மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்தக் கூடாது என்றாா் மாணிக்கம் தாகூா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.