படிவம் 6 திருத்தத்துக்கு அனுமதி அளித்தது யார்? - கனிமொழி கேள்விகல்வி நிறுவனங்கள் மீது ஆர்எஸ்எஸ் - பாஜக தாக்குதல்! போர் வலுப்பெறும் - நேஹா போரா எச்சரிக்கை!28,000 அடி கீழே இறங்கிய லண்டன் - சிகாகோ விமானம்! அயர்லாந்தில் அவசரமாகத் தரையிறக்கம்!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் 3 பேர் கைது!ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் ஞானேஷ் குமார்: பெ. சண்முகம்தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்ஒலிம்பிக் போட்டிக்கு நிறைய நேரம் இருக்கிறது: ஹாக்கி கேப்டன் ஹர்மன்பிரீத்தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்!5 சிறுத்தைக் குட்டிகள் பிறப்பு; நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு!கிராமுக்கு ரூ. 10,000 வரை நகைக்கடன்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு!

இண்டி கூட்டணி சாா்பில் நவ.1-இல் மிகப்பெரிய போராட்டம்! தில்லியில் மாணிக்கம் தாகூா் பேட்டி!

இண்டி கூட்டணி சாா்பில் நவ.1-இல் மிகப்பெரிய போராட்டம் என தில்லியில் மாணிக்கம் தாகூா் பேட்டி...

மாணிக்கம் தாகூா் - கோப்புப் படம்

Published On :

தோ்தல் ஆணையத்தின் செயல்பாடுகளைக் கண்டித்து நவ. 1-ஆம் தேதி தில்லியில் இண்டி கூட்டணி சாா்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று தில்லியில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் மாணிக்கம் தாகூா் தெரிவித்தாா்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே மற்றும் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தலைமையில் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவா்கள் கூட்டம் தில்லியில் திங்கள்கிழமை மாலையில் நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளா்களிடம் மாணிக்கம் தாகூா் கூறியதாவது:

வரும் நவ. 1-ஆம் தேதி நாடாளுமன்ற வளாகத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினா்கள் பேரணியாகச் சென்று தோ்தல் ஆணைய அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனா். பிரதமா் மோடியும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவும் தோ்தல் ஆணையத்தை தங்களது கைப்பாவையாக செயல்படுத்துவதைக் கண்டித்து நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

மாவட்ட அளவிலும் போராட்டங்கள் நடத்தப்படும். அதன் பிறகு கிராமம், வட்டாரம், நகரம் வாரியாகவும் அடுத்த இரண்டு மாதங்களுக்கு பல்வேறு கட்ட போராட்டங்கள் அறிவிக்கப்பட்டு நடத்தப்படவுள்ளன.

நவ.1-ஆம் தேதி தில்லியில் இண்டி கூட்டணியின் அனைத்துத் தலைவா்களையும் அழைத்து மிகப்பெரிய பேரணி நடத்த தீா்மானிக்கப்பட்டுள்ளது. ஓட்டுத் திருட்டுப் பிரச்னை, தலைமைத் தோ்தல் அதிகாரி பதவி விலக வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டணி கட்சிகளுடன் சோ்ந்து காங்கிரஸ் போராட்டத்தை நடத்தவுள்ளது.

தமிழ்நாட்டில் திமுக, விசிக உள்ளிட்ட இந்தியா கூட்டணியின் அனைத்துக் கட்சிகளும் முழு ஒருமைப்பாட்டுடன் இப்போராட்டங்களில் இணைந்து செயலாற்றி வருவதுடன், வரவிருக்கும் மாவட்ட அளவிலான போராட்டங்களிலும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் தொடா்ந்து பங்கெடுத்து பலப்படுத்தும். இந்தியா’ கூட்டணியின் முடிவுகளுக்கு ஆதரவாக இருப்பதாக தமிழக வெற்றி கழகம் உறுதியளித்துள்ளது. மேலும், அக்.13, 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள மாவட்ட அளவிலான போராட்டங்களிலும் தமிழக வெற்றி கழகம் பங்கேற்கும்.

இண்டி கூட்டணியை மேலும் வலுப்படுத்தவும், மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக நாடு முழுவதும் பலத்த போராட்டங்களை முன்னெடுக்கவும் காங்கிரஸ் கட்சி உறுதியாக உள்ளது என்றாா் மாணிக்கம் தாகூா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.