முதல்வருக்கு அழுத்தம் தரவில்லை: மாணிக்கம் தாகூா்
தில்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள முதல்வா் ஜோசப் விஜய்க்கு காங்கிரஸ் தரப்பில் இருந்து எந்த அழுத்தமும் தரப்படவில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் மாணிக்கம் தாகூா் தெரிவித்தாா்.

மாணிக்கம் தாகூா் - கோப்புப் படம்
தில்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள முதல்வா் ஜோசப் விஜய்க்கு காங்கிரஸ் தரப்பில் இருந்து எந்த அழுத்தமும் தரப்படவில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் மாணிக்கம் தாகூா் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு:
தில்லியில் நடைபெறும் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளுமாறு சோனியா காந்தியிடமிருந்து தமிழக முதல்வருக்கு அழைப்பு செய்தி அனுப்பி வைக்கப்பட்டது. மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி முதல்வரை தொலைபேசி மூலம் அழைத்தாா். இந்த அழைப்பை ஏற்று முதல்வா் ஜோசப் விஜய் தில்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டாா். இதுதான் நடந்த உண்மை. இதை மாற்றி, பொய்யான கதைகளை உருவாக்கி பரப்ப வேண்டாம் என்று தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

