சோனியா காந்தி புத்தக வெளியீட்டு விழா! முதல்வர் விஜய் பங்கேற்பு!

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவில் முதல்வர் விஜய் கலந்துகொண்டுள்ளது குறித்து...

Sonia Gandhis book launch

விழா நடைபெறும் அரங்கில் முதல்வர் ஜோசப் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா - எக்ஸ்

Updated On :

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கலந்துகொண்டுள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்களும் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றுள்ளனர்.

தில்லியில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றுவரும் புத்தக வெளியீட்டு விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மூத்த தலைவர் ப. சிதம்பரம் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

இவர்களுடன் கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கேரள முதல்வர் வி.டி. சதீசன், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா, ஜம்மு - காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், அவரின் மனைவி டிம்பிள் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

நிகழ்ச்சியில் காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த முதல்வர்கள் மட்டுமே பங்கேற்றுள்ள நிலையில், முதல்வர் விஜய் மட்டுமே அமைச்சருடன் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுடன் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றுள்ளார்.

தில்லிக்குச் சென்றுள்ள முதல்வர் விஜய் அரசு பங்களாவுக்கு பதிலாக, தனியார் நட்சத்திர விடுதியில் தங்கியிருந்து, புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்.

அரசுமுறைப் பயணமாக தில்லிக்குச் செல்லாததால், அவர் தனியார் விடுதியில் தங்கியிருந்து தமிழகம் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஜூலையில் முதல்வர் விஜய் தில்லிக்குச் சென்றிருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது தில்லி பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த முறை பயணத்தில் சோனியா, ராகுலை சந்தித்திருந்தார். இம்முறையும் இருவரையும் சந்தித்துப் பேசுவார் எனத் தெரிகிறது.

Summary

Sonia Gandhis book launch event! Chief Minister Vijay participates

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER