உங்களுக்குத் தேவை மசாலா! சந்திரபாபு நாயுடுவின் பேச்சுக்கு தவெக அளித்த பதில்!பிலிப்பின்ஸில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!புழல் சிறையில் அன்பில் மகேஸை மீண்டும் சந்தித்தார் உதயநிதி ஸ்டாலின்! தனி விமானத்தில் தில்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்!நடிகை த்ரிஷா திருமணம் எப்போது? பிரபல பெண் ஜோதிடர் வெளியிட்ட கணிப்பு!ஆதவ் அர்ஜுனாவை பிரிவதாக மனைவி டெய்சி மார்ட்டின் அறிவிப்பு!பாம்பன் பாலத்திலிருந்து கடலில் குதித்த பயணிகள்! ஒருவர் பலி!திமுக ஆட்சியில் பதியப்பட்ட வழக்குகள் ரத்து! 92,000 விவசாயிகள், ஆசிரியர்கள் விடுவிப்பு!அக்வான் புயல் எங்கே கரையைக் கடக்கும்? வெளியான அதிர்ச்சித் தகவல்!கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு ஐசிசி தலைவராக மீண்டும் ஜெய் ஷா தேர்வு!

பிள்ளைகள் 18 வயதை எட்டுகிறார்களா? அவசியம் செய்ய வேண்டிய 5 விஷயங்கள்!!

உங்கள் மகன் அல்லது மகள் 18 வயதை எட்டும்போது அவசியம் செய்ய வேண்டிய 5 விஷயங்கள் பற்றி..

Girls queue up to cast their votes for the DUSU Election at Miranda College in North Campus on September 12, 2018 in New Delhi

18 வயதானதும் செய்ய வேண்டியவை. - ENS

Updated On :

வீட்டில் இருக்கும் பிள்ளைகள் 18 வயது எட்டும்போது, பெற்றோர் சில அடிப்படை விஷயங்களை நிச்சயம் செய்து கொடுக்க வேண்டும்.

முன்பெல்லாம் ஒவ்வொன்றுக்கும் நடையாய் நடக்க வேண்டிய நிலை இருந்தது. ஆனால் தற்போது உட்கார்ந்த இடத்திலேயே இவற்றில் பெரும்பாலான விஷயங்களை பெற்றோர் செய்து முடித்து விடலாம்.

உங்கள் மகன் அல்லது மகள் பள்ளியை முடித்துவிட்டு கல்லூரிக்குள் அடியெடுத்து வைக்கும்போது சராசரியாக 18 வயது பூர்த்தியாகியிருக்கும்.

அப்போது அவர்களுக்கு என சில முக்கிய ஆவணங்களை வாங்கித் தர வேண்டியது அவசியம். அதில் முதலில் இருப்பது

வங்கிக் கணக்கு

பிள்ளைகளுக்கு 18 வயதானதும், முதலில் அவர்களுக்கு ஒரு சேமிப்புக் கணக்குத் தொடங்கித் தர வேண்டும். பணத்தை சேமிக்கவும் செலவிடவும் வங்கிக் கணக்கைப் பயன்படுத்தவும் பழக்கப்படுத்த வேண்டும்.

வாக்காளர் அடையாள அட்டை

பெற்றோரின் வாக்காளர் அடையாள அட்டையை அடிப்படையாக வைத்து தேர்தல் ஆணையத்தின் இணையதளத்திலேயே புதிய வாக்காளர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.

இப்போது மிகவும் எளிமையாக, குறைந்த தகவல்களை அளித்து புதிய வாக்காளர்களை சேர்க்க முடியும். வீடு தேடி வாக்காளர் அடையாள அட்டை அனுப்பப்படுகிறது.

பான் அட்டை

இது எதற்கு என்று நினைக்காமல், 18 வயதான பிள்ளையின் பெயரில் பான் அட்டைக்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்வது நல்லது. வங்கிக் கணக்குகள் தொடங்குவதற்கும் இது அவசியமாகிறது என்பதால் தாமதிக்க வேண்டாம்.

ஓட்டுநர் உரிமம்

18 வயதானதும், இரு சக்கர வாகனம் ஓட்டினால் இரு சக்கர வாகனத்துக்கும் கார் ஓட்டத் தெரிந்தவராக இருந்தால் கார் ஓட்டுநர் உரிமமும், இரண்டும் தெரிந்தவராக உங்கள் பிள்ளை இருந்தால் ஒரே நேரத்தில் இரண்டு வாகனத்துக்கும் ஒட்டுநர் உரிமம் கோரி விண்ணப்பிக்க வேண்டும்.

பயிற்றுனர் சான்று பெற்று ஆறு மாதத்துக்குள், ஒரு நாளை நீங்களே இணையதளம் வாயிலாக தெரிவு செய்து உரிய வாகனங்களோடு சென்று ஆய்வாளர் முன்னிலையில் வானங்களை இயங்கி ஓட்டுநர் உரிமம் பெற்றுக் கொள்ளலாம். இது இப்போது இணையம் வாயிலாகவே பெறும் வசதியும் வந்துவிட்டது.

பாஸ்போர்ட்

படிக்க அல்லது வேலை செய்ய வெளிநாடு செல்ல வேண்டும் என்றால் பாஸ்போர்ட் அவசியம். எனவே, 18 வயதானதும் தேவையான ஆவணங்களைக் கொடுத்து பாஸ்போர்ட் பெற்றுக் கொள்வதும் அவசியம். தேவைப்படும்போது அவசர கதியில் செயல்படுவது சரியாக இருக்காது.

ஆதார் அப்டேட்

ஏற்கனவே ஆதார் அட்டை வாங்கியிருந்தால், 18 வயதானதும் அதனை அப்டேட் செய்து வைத்துக் கொள்ள வண்டும். பொதுவாகவே 15 வயதில் அப்டேட் செய்யச் சொல்வார்கள். அப்போது செய்யாதவர்கள் உடனடியாக 18 வயதானதும் ஆதார் அப்டேட் செய்து கொள்வது நல்லது.

Summary

Are your children reaching the age of 18? Here are 5 essential things to do!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.