சைபர் குற்றங்களில் இருந்து தற்காத்துக் கொள்ள! 5 முக்கிய பழக்கங்கள்காந்தி நினைவிடத்தில் அமர்ந்து இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் தர்னா!தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலுக்கு 10 பேர் பலி; 21,655 பேர் பாதிப்பு! அமைச்சர் அருண்ராஜ்எஸ்ஐஆருக்கு எதிரான போராட்டம்: ஞானேஷ்குமாருக்கு Z+ பாதுகாப்பு அதிகரிப்பு!‘காலா’ பட நடிகர் நானா படேகர் காலமானார்!பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் காலமானார்!

ஆதார் அட்டையில் பெயர் திருத்தம் செய்ய புதிய விதிமுறைகள்!

ஆதார் அட்டையில் பெயர் திருத்தம் செய்ய புதிய விதிமுறைகள் அறிமுகம்

ஆதார் அட்டை

ஆதார் அட்டை

Published On :

ஆதார் அட்டையில் பெயரில் திருத்தங்கள் செய்ய புதிய விதிமறைகள் அமைக்கப்பட்டுள்ளன. பெயரில் என்ன திருத்தம் என்பதைப் பொருத்து இந்த விதிமுறை பொருந்தும்.

ஆதார் அட்டையில் பெயரை மாற்றுவது என்பது, துல்லியமாக என்ன மாற்றம் செய்யப்பட வேண்டும் என்பதைப் பொறுத்து விதிகள் அமலாகும்.

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டையில் பெயர் திருத்த நடைமுறைகளை மாற்றியமைத்துள்ளது. இதன்படி, சிறிய திருத்தங்கள், பதிவு தொடர்பான பிழைகள், திருமணம் அல்லது விவாகரத்தைத் தொடர்ந்து செய்யப்படும் மாற்றங்கள் மற்றும் முழுமையான பெயர் மாற்றம் ஆகியவற்றுக்குத் தனித்தனி விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

புதிய விதிமுறைகளின்படி, ஒவ்வொரு வகை மாற்றத்திற்கும் தேவையான குறிப்பிட்ட ஆவணங்கள் மற்றும் உறுதிமொழிப் பத்திரங்கள் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு, கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டிருந்த பெயர் மாற்ற நடைமுறைக்கு மாற்றாக, இந்த புதிய நிலையான செயல்பாட்டு நடைமுறை (SOP) அமலுக்கு வருவதாக யுஐடிஏஐ (UIDAI) தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் பெயர் திருத்தம் - அனைத்தும் ஒரே மாதிரியானவை அல்ல!

திருத்தப்பட்ட புதிய விதிமுறையின் கீழ், எழுத்துப்பிழை திருத்தம், பெயரின் வரிசை மாற்றம் மற்றும் அடையாளத்தையே முழுமையாக மாற்றியமைத்தல் ஆகியவை இனி ஒரே மாதிரியாகக் கருதப்படுவதில்லை.

1. முதலெழுத்தை முழுமையாக விரிவுபடுத்துதல் அல்லது சுருக்கத்தை மாற்றுதல், இடைப்பெயர் (middle name) அல்லது குடும்பப் பெயரைச் சேர்த்தல் அல்லது நீக்குதல், அல்லது பெயரின் வரிசையை மாற்றுதல்.

2. உச்சரிப்பில் மாற்றம் இல்லாத பட்சத்தில், சிறிய எழுத்துப்பிழைகளையும் திருத்திக் கொள்ளலாம். பெயர்களில் பெரிய எழுத்துக்களைப் (capital letters) பயன்படுத்துவதில் உள்ள சீரற்ற தன்மை அல்லது தேவையற்ற இடங்களில் முற்றுப்புள்ளி (full stop) இருப்பது போன்ற வடிவமைப்பு சார்ந்த சிக்கல்களும் இதில் அடங்கும்.

3. ஆதார் எண் வைத்திருப்பவர் சமர்ப்பிக்கும் ஆதார ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எழுத்துக்கூட்டு (spelling), வரிசை மற்றும் சுருக்க வடிவத்தின்படியே பெயர் புதுப்பிக்கப்படும் என்று UIDAI-யின் சுற்றறிக்கை தெரிவிக்கிறது.

இத்தகைய சிறிய திருத்தங்களுக்கு, சரியான பெயரைக் கொண்ட அல்லது திருத்தம் கோரும்படியான பெயர் இருக்கும் செல்லுபடியாகும் அடையாளச் சான்று (PoI) ஆவணத்தை விண்ணப்பதாரர் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER