வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்ய 2 நாள் சிறப்பு முகாம்
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள 2 நாள்கள் சிறப்பு முகாம் நடைபெறுவது குறித்து...

வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் - பிரதிப் படம்
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள மாநிலம் முழுவதும் இன்றும் நாளையும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்புவோருக்கு இந்திய தேர்தல் ஆணையம் வாய்ப்பளித்துள்ளது. இதன்படி தகுதியுள்ள இளம் வாக்காளர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் இணைத்துக்கொள்ளலாம்.
18 வயது பூர்த்தியடைந்த மற்றும் தகுதியான வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 6 மற்றும் அதனுடன் கூடிய உறுதிமொழிப் படிவத்தைப் பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.
இதேபோல், பெயர் நீக்குவதற்கு படிவம் 7, வாக்காளர் விவரத் திருத்தம், முகவரி மாற்றம் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை மாற்றுப் பிரதி பெறுவதற்கு படிவம் 8-ஐயும் பூர்த்தி சமர்ப்பிக்க வேண்டும்.
2027 ஜனவரி 1-ல் 18 வயது பூர்த்தியடைவோர், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதோர் இந்த சிறப்பு முகாம்களில் பயன் பெறலாம்.
மாநிலத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் இன்றும் நாளையும் (நவ. 21, 22) இரு நாள்களுக்கு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தின் வாயிலாகவும் (https://voters.eci.gov.in/) மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
Summary
Two-day special camp for revisions to the electoral roll in Tamil Nadu
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

