சிஜேபி போராட்டம்: விமானத்திலேயே கைது செய்யப்பட்ட அபிஜீத் தீப்கே!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 520 உயர்வு!ஜந்தர் மந்தரில் போராட்டம்: 150 சிஜேபி ஆதரவாளர்கள் கைது!பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ வழித்தடத்தில் இணைப்பு பேருந்து சேவை: மாநகர போக்குவரத்து கழகம்இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேலின் உயரிய விருது அறிவிப்புஏா் இந்தியா, ஆகாசா ஏா் விமானக் கட்டணங்களும் உயா்வுஎதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி இன்று சென்னை வருகை: மாணவா் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்கிறாா்திருக்கோயில் பணியாளா்களுக்கான திருமணக் கடன் உயா்வு: தமிழக அரசு அரசாணைபிரதமா் மோடி நாளை சென்னை வருகை: 22,000 போலீஸாருடன் ஐந்தடுக்கு பாதுகாப்பு

ஆதார் பெயர் பதிவின்போது தவறு நேரிட்டிருந்தால்... எப்படி திருத்துவது?

ஆதார் பெயர் பதிவின்போது தவறு நேரிட்டிருந்தால் எப்படி திருத்துவது என்பது குறித்து..

ஆதார் பெயர் திருத்தம்

ஆதார் பெயர் திருத்தம்

Published On :

ஆதார் அட்டையில் உள்ள பெயரில் திருத்தங்கள் மேற்கொள்ள புதிய விதிமறைகள் உருவாக்கப்பட்டு, ஒவ்வொரு விதமான திருத்தத்துக்கும் ஒவ்வொரு விதி பொருந்தும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.

ஆதார் அட்டையில் பெயரை மாற்றுவது என்பது, துல்லியமாக என்ன மாற்றம் செய்யப்பட வேண்டும் என்பதைப் பொறுத்து நடைமுறைகள் மாறும்.

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டையில் பெயர் திருத்த நடைமுறைகளை புதுப்பித்துள்ளது. இதன்படி, சிறிய திருத்தங்கள், பதிவு தொடர்பான பிழைகள், திருமணம் அல்லது விவாகரத்தைத் தொடர்ந்து செய்யப்படும் மாற்றங்கள் மற்றும் முழுமையான பெயர் மாற்றம் ஆகியவற்றுக்குத் தனித்தனி விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

ஆரம்பப் பதிவின் போது தட்டச்சு அல்லது நிர்வாகம் சார்ந்த பிழையால் பெயர் தவறாகப் பதிவு செய்யப்பட்டிருந்தால், அதற்கென ஒரு தனி நடைமுறை பின்பற்றப்படும்.

பெரியவர்களைப் பொறுத்தவரை, 'இணைப்பு B' (Annexure B) படிவத்திலான உறுதிமொழிப் பத்திரத்துடன், அங்கீகரிக்கப்பட்ட அடையாளச் சான்று அல்லது உறவுமுறைச் சான்றை சமர்ப்பிக்க வேண்டும்.

சிறுவர்கள் அல்லது குழந்தைகளைப் பொறுத்தவரை, பெற்றோர் அல்லது பாதுகாவலர் 'இணைப்பு C' (Annexure C) படிவத்திலான உறுதிமொழிப் பத்திரத்தை, தொடர்புடைய அடையாள அல்லது உறவுமுறை ஆவணங்களுடன் சேர்த்துச் சமர்ப்பிக்க வேண்டும்.

ஆதார் வைத்திருப்பவர் பிற்காலத்தில் தனது பெயரை மாற்றிக்கொள்ள எடுக்கும் முடிவினால் ஏற்படும் மாற்றங்கள் அல்லாமல், ஆரம்பகட்டத் தரவுப் பதிவுச் செயல்முறையின் போது ஏற்பட்ட பிழைகளுக்கு மட்டும் இந்த நடைமுறை பொருந்தும்.

உள்ளூர் மொழிப் பிழைகளுக்குத் தனி விதிமுறை

ஆதார் பதிவேட்டில் பெயர் ஆங்கிலத்தில் சரியாகப் பதிவு செய்யப்பட்டிருந்தும், அது உள்ளூர் மொழியில் தவறாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் நேர்வுகளுக்கும் UIDAI பிரத்யேக வழிமுறைகளைச் சேர்த்துள்ளது.

இத்தகைய முரண்பாடுகள், திருத்தப்பட்ட பெயர் புதுப்பித்தல் நடைமுறையின் கீழ் கொண்டுவரப்படுகின்றன. இதன்மூலம், உள்ளூர் மொழிப் பிழையை முழுமையான அடையாள மாற்றமாகக் கருதாமல் திருத்திக்கொள்ள எளிமையாக அனுமதிக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER