பாம்பன் பாலத்திலிருந்து கடலில் குதித்த பயணிகள்! ஒருவர் பலி!
இரு வேறு சம்பவங்களில், பாம்பன் பாலத்திலிருந்து கடலில் குதித்த பயணிகளில் ஒருவர் பலியானார்.

பாம்பன் கடல் பகுதி
தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாம்பன் பாலத்தில் ரயில்கள் சென்று கொண்டிருந்தபோது இரு வேறு சம்பவங்களில், பயணிகள் கடலில் குதித்ததில், ஒருவர் பலியானார். மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.
தமிழ்நாட்டின் புகழ்பெற்ற பாம்பன் பாலத்தில், ரயில்கள் செல்லும்போது, அதிலிருந்து பயணிகள் குதித்திருப்பது, பாதுகாப்பு அபாயத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
சனிக்கிழமை இரவு பாம்பன் பாலம் மீது ரயில் சென்று கொண்டிருந்தபோது, அதிலிருந்து ஒரு பயணி குதித்ததில், அவர் பலியானார். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, மற்றொரு பெண் பயணி குதித்ததில், அவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முதல் சம்பவம் ராமேஸ்வரத்திலிருந்து மதுரை நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயில், பாம்பன் பாலத்தைக் கடந்து கொண்டிருந்தது. திடீரென அந்த ரயிலில் இருந்த ஒரு இளைஞர் ரயிலில் இருந்து வெளியே குதித்துள்ளார். இதனைப் பார்த்த சக பயணிகள் காவல்துறைக்குத் தகவல் கொடுத்து தேடப்பட்டு வந்தது.
முல்லிமுனை தீவு அருகே, அந்த இளைஞரின் உடல் ஞாயிற்றுக்கிழமை கரை ஒதுங்கியது. அவர் யார், எங்கிருந்து வருகிறார் என்பது குறித்த தகவல்கள் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே ஞாயிற்றுக்கிழமை காலை கேரள மாநிலம் பாலக்காட்டிலிருந்து ராமேஸ்வரம் வந்த ரயிலில் இருந்து இளம் பெண் ஒருவர் கடலில் குதித்தார். ஆனால், அவர் பாலம் பகுதிக்குள்ளேயே விழுந்ததால் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அப்பெண் மயக்கமடைந்த நிலையில் இருப்பதால் அவரது அடையாளங்கள் தெரியவில்லை. பாம்பன் பாலத்திலிருந்து குதித்து பலியான இளைஞரின் அடையாளங்களும் தெரியாமல் உள்ளதாகக் கூறப்படுகிறது.
ஒவ்வொரு நாளும் ஏராளமான ரயில்கள் பாம்பன் பாலத்தைக் கடந்து செல்லும் நிலையில், இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பொதுவாக செல்ஃபி அல்லது விடியோ எடுக்க முனையும்போது இவ்விடத்தில் பலரும் கடலில் விழும் சம்பவம் நேரிடுவதாகவும், மீனவர்களால் இவர்கள் காப்பாற்றப்படுவதாகவும் கூறப்படுகிறது.
Summary
Passengers jumped into the sea from the Pamban Bridge! One person died!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

