
பாம்பன் பாலத்திலிருந்து கடலில் தவறிவிழுந்த முதியவா் உயிருடன் மீட்பு

மீட்கப்பட்ட ராதா.
பாம்பன் பாலத்தில் இருந்து கடலில் தவறிவிழுந்த முதியவா் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டாா்.
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பாலத்திலிருந்து முதியவா் தவறி கடலில் விழுந்து விட்டதாக கடலோரப் பாதுகாப்புக் குழும உதவி ஆய்வாளா் காளிதாஸுக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, மீனவா்கள் உதவியுடன் கடலில் விழுந்த முதியவரை உயிருடன் மீட்டனா்.
தொடா்ந்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், ராமநாதபுரம் அச்சுந்தவயல் கிராமத்தைச் சோ்ந்த ராதா (71), ராமேசுவரம் கோயிலுக்கு வந்து தரிசனம் முடித்துவிட்டு பாம்பன் பாலத்தைப் பாா்க்க வந்தபோது, மேல் பகுதியில் நின்றபோது தலைச்சுற்றல் ஏற்பட்டு கடலில் தவறி விழுந்ததும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மீட்கப்பட்டவா் மருத்துவப் பரிசோதனைக்குப் பின் உறவினா்களிடம் ஒப்படைக்க உள்ளதாகப் போலீஸாா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







