காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சுமேட்டூரிலிருந்து காவிரி நீர் கல்லணை வந்தது! நாளை காலை திறப்பு!நேபாள பெருவெள்ளம்! தஞ்சையில் மரபணு சேகரிப்பு பணி தொடக்கம்!!தவெக ஆதரவு கட்சிகள் கூட்டம்: காங்கிரஸுக்கு நேரில் அழைப்பு விடுத்த அமைச்சர்கள்!உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

10 நாள்கள் இடிபாடுகளுக்குள்... உயிருடன் மீட்கப்பட்ட நேபாள பெண்!

நேபாள பெருவெள்ளத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த பெண் மீட்கப்பட்டது தொடர்பாக...

Nepal

வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட நேபாள் - கோப்புப் படம்

Published On :5 செப்டம்பர் 2026, 4:12 pm IST

நேபாள பெருவெள்ளத்தில் நுவாகோட் மாவட்டத்தில் இடிபாடுகளில் சிக்கியிருந்த 60 வயது பெண் 10 நாள்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டதாக உள்ளூர் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

ஆகஸ்ட் 26ல் நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தனர். மீட்புப்பணி தொடர்ந்த 11வது நாளை எட்டியுள்ள நிலையில், இதுவரை 1,300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 5,000 பேர் காணாமல் போயுள்ளனர்.

இந்த நிலையில், மீட்புப்பணி நடைபெற்று வருகையில், நுவாகோட் மாவட்டத்தில் உள்ள பெட்ராபதியில், நான்கு மாடிக் கட்டடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த வீட்டின் மேல் தளத்தில் 60 வயதுடைய பெண் 10 நாள்களுக்குப் பிறகு மயக்கமடைந்த நிலையில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

பிதுர் நகராட்சி-10 பகுதியில் ஒன்பது பேர் கொண்ட ஆயுதப் படை குழுவினரால் மீட்கப்பட்ட ஷ்ரேஸ்தா, முதலுதவி சிகிச்சைக்காக ஹெலிகாப்டர் மூலம் திரிசூலியில் உள்ள நேபாள ராணுவத்தின் மைதிலி முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

தேவைப்பட்டால் மேல் சிகிச்சைக்காக அவர் காத்மாண்டுவிற்கு அழைத்து வரப்படுவார் என நேபாளப் பிரதமரின் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாயமானவர்களின் உடல்கள் சிலிமே சுரங்கத்துக்குள் தேட தொடங்கியுள்ள நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

Nepal floods: Woman rescued alive after 10 days trapped in debris-buried house

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.