தவெக ஆதரவு கட்சிகள் கூட்டம்: காங்கிரஸுக்கு நேரில் அழைப்பு விடுத்த அமைச்சர்கள்!உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சு

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான் என அமைச்சர் விக்னேஷ் கூறியுள்ளது பற்றி..

வளைகாப்பு விழாவில் அமைச்சர் விக்னேஷ்

வளைகாப்பு விழாவில் அமைச்சர் விக்னேஷ்

Published On :5 செப்டம்பர் 2026, 11:45 am IST

டாஸ்மாக் பிரச்சனை என்பது 200 படிகள் கொண்டது, ஆனால் நான் 70 படிகள் வரை ஏறிவிட்டேன். மீதமுள்ள படிகளை ஏறி விரைந்து நடவடிக்கை எடுப்பேன் என அமைச்சர் விக்னேஷ் கூறியுள்ளார்.

கோவை தொண்டாமுத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பேரூர் அருகே தமிழக வெற்றிக் கழகம் மேற்கு மகளிரணி சார்பாக கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் கே விக்னேஷ் கலந்து கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், புனிதமான தமிழ் மண்ணில் பிறக்கும் குழந்தைகள், தளபதி ஆட்சியில் வரம் வாங்கி கொண்டு பிறக்கும் குழந்தைகள் இவர்கள்.

டாஸ்மாக் ஊழியர்கள் முன் அறிவிப்பின்றி கடை அடைத்தவர்கள் மீண்டும் கடை திறக்க ஆரம்பித்து விட்டார்கள். பணிக்கு வராதவர்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுப்போம், பழி வாங்கும் நோக்கம் ஏதும் இல்லை. தப்பு யார் செய்தாலும் தப்பு தான். அரசு தப்பு செய்தாலும், அமைச்சர் தப்பு செய்தாலும் அதற்கான தண்டனையை அனுபவித்துதான் ஆக வேண்டும்.

இன்றைய டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம், ஆர்பாட்டம் காரணமானவர்கள் திமுக - அதிமுக தான். அன்று இவர்கள் பிரச்னை குறித்து நடவடிக்கை எடுத்து இருந்தால் இவ்வளவு தூரம் வந்து இருக்காது. இது ஒரு உதாரணம் தான்.

இந்த மாதிரி அனைத்து துறைகளிலும் பிரச்னை உள்ளது. டாஸ்மாக் பிரச்சனை என்பது 200 படிகள் கொண்டது, ஆனால் நான் 70 படிகள் வரை ஏறிவிட்டேன். மீதமுள்ள படிகளை ஏறி விரைந்து நடவடிக்கை எடுப்பேன் என்று விக்னேஷ் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.