ஆன்லைனில் மதுபான விற்பனை தொடங்கியுள்ள நிலையில் முன்பதிவு செய்தவர்களுக்கு வீடுதேடி மதுபானம் கொடுக்கப்படுமா? என்பது குறித்து மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷ் விளக்கம் அளித்துள்ளார்.
அதாவது, இணையதளத்தில் டாஸ்மாக் மதுபானத்தை முன்பதிவு மட்டுமே செய்ய முடியும் என்றும், வீடுகளுக்கு டெலிவரி செய்யப்படும் என்பது தவறான செய்தி எனவும் குறிப்பிட்டார்.
21 வயது நிரம்பாதவர்களுக்கு மதுபானம் கிடையாது; கடைக்குச் சென்று தான் வாங்க வேண்டும் என்பதால் வயது உறுதி செய்யப்படும் எனவும் அமைச்சர் விளக்கினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இது தொடர்பாக செய்தியாளர்களுடன் அமைச்சர் விக்னேஷ் பேசியதாவது:
டாஸ்மாக் மதுபானத்தை ஆன்லைனில் முன்பதிவு செய்து வாங்கும் நடைமுறை இன்றுமுதல் அமலாகியுள்ளது. ரசீது வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் ஆன்லைனிலேயே ரசீது வழங்கப்படும்.
ஆன்லைனில் முன்பதிவு செய்து டாஸ்மாக் கடைக்குச் சென்றுதான் மதுபானத்தை வாங்க முடியும். வீடு தேடி மதுபானம் கொண்டுசேர்க்கப்படும் என்பது வதந்தி.
எல்லா நிறுவனங்களின் மதுபானங்களும் தடையின்றி கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மின்சார செலவு, கடை வாடகை போன்றவற்றைக் குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வீடு தேடி மதுபானம் வரும் எனக் கூறுவது தவறு. ஊழலைக் குறைத்தாலே அரசுக்கு வருவாய் அதிகரிக்கும். மதுவிற்று வருவாயை அதிகரிக்க வேண்டும் என்ற கட்டாயம் அரசுக்கு இல்லை.
தவெக ஆட்சியில்தான் பாட்டிலுக்கு 10 ரூபாய் வசூலிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேறு எந்தவொரு ஆட்சியிலும் நடவடிக்கை எடுக்கவில்லை
மதுபானங்களின் விலையை உயர்த்தும் திட்டம் இல்லை என விக்னேஷ் குறிப்பிட்டார்.
Summary
Online home delivery of liquor Minister Vignesh clarifies
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இணையத்தில் முன்பதிவு செய்து டாஸ்மாக் கடையில் மதுபானம் வாங்கும் திட்டம்: இன்று தொடக்கம்

டாஸ்மாக் மது வகைகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் திட்டம் ஆபத்தானது: கேடான முடிவை அரசு கைவிட வேண்டும்! - அன்புமணி

எதிர்க்கட்சி தூண்டுதலால் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்! அமைச்சர் விக்னேஷ்

டாஸ்மாக் ஊழியா்களுக்கு 25 % வரை ஊதிய உயா்வு: அமைச்சா் விக்னேஷ் அறிவிப்பு
விடியோக்கள்

ஈரானுக்கு டிரம்ப் விடுக்கும் எச்சரிக்கை! | Donald Trump | Iran | Hormuz Strait |




