வேளாண் பணிகளை ட்ரோன் மூலம் மேற்கொள்வதற்காக 100 மகளிர் உள்பட 500 பேருக்கு அரசு செலவில் டிரோன் இயக்குபவர் பயிற்சி மற்றும் இயக்குபவர் உரிமம் வழங்க ரூ. 1.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2026 -27 ஆம் ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் இன்று(ஆக. 6) சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றினார்.
இதில், பெண்களை டிரோன் இயக்குபவராக உருவாக்க வேளாண்மை பட்ஜெட்டில் வெற்றி வான்மகள் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் வேளாண் பணிகளை டிரோன் மூலம் மேற்கொள்ள 100 மகளிர் உள்ளிட்ட 500 நபர்களுக்கு மாநில அரசு செலவில் ட்ரோன் இயக்குபவர் பயிற்சி மற்றும் இயக்குபவர் உரிமம் வழங்கப்படும்.
இதற்காக வேளாண்மை பட்ஜெட்டில், ரூ. 1.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பயிற்சி பெற்ற மகளிர் டிரோன்கள் வாங்குவதற்கு 50 மகளிருக்கு 50 சதவீத மானியம் வழங்கப்படும்.
விவசாயிகளின் நிலங்களில் 500 பண்ணைக் குட்டைகள் உருவாக்கிடவும் 500 பண்ணைக் குட்டைகளில் தூர்வாரவும் ரூ. 8.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சூரிய சக்தி பம்புசெட்டுகள் அமைத்திட 1,000 விவசாயிகளுக்கு ரூ. 23 கோடி மானியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Funds amounting to rs. 1.50 crore have been allocated to provide drone operator training and licenses at government expense to 500 individuals, including 100 women, for carrying out agricultural operations.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வேளாண் பட்ஜெட் 2026: சென்னை, கோவை, திருச்சியில் தளிர்க்கீரைகள் திட்டம்!
சிறுதானியங்களின் உற்பத்தியை அதிகரிக்க ரூ. 63.81 கோடி நிதி ஒதுக்கீடு!

வேளாண் துறைக்கு ரூ.14,984 கோடி

பட்ஜெட் 2026: அண்ணனின் சீர், தாய் கேர்... பெண்களுக்கான திட்டங்கள் என்னென்ன?
விடியோக்கள்

ஈரானுக்கு டிரம்ப் விடுக்கும் எச்சரிக்கை! | Donald Trump | Iran | Hormuz Strait |




