
இந்துத்துவ ஆதரவாளர் பரத்வாஜுக்கு ஒரு நாள் போலீஸ் காவல்!
சிஜேபி ஆதரவாளரின் தந்தையை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்துத்துவ ஆதரவாளர் பற்றி..

ஸ்வதந்த்ர பரத்வாஜ் - X
இந்துத்துவ ஆதரவுப் பேச்சாளர் சுவதந்திர பரத்வாஜ் ஒரு நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டார்.
இந்துத்துவ ஆதரவாளர் சுவதந்திர பரத்வாஜ் தில்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், தில்லி நீதிமன்றம் அவரை ஒருநாள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டது.
ஜந்தர் மந்தரில் சிஜேபி போராட்டத்தின்போது சிஜேபி அமைப்பைச் சேர்ந்த நிஷு ஆசாத் என்பவரின் தந்தையான சஞ்சய் குமாரைத் தாக்கிய இந்துத்துவ ஆதரவாளரும் சமூக ஊடகப் பிரபலமுமான ஸ்வதந்த்ர பரத்வாஜ் மீது நடவடிக்கை கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆதரவாளர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்ற வீதியின் காவல் நிலையத்திற்கு அருகே சிஜேபியினர், பரத்வாஜ் மீது கடுமையான நடவடிக்கை கோரி போராட்டம் நடத்தினர். இதையடுத்து, புலந்த்ஷஹரில் பரத்வாஜ் நேற்று கைது செய்யப்பட்டார்.
பரத்வாஜ் மீதான முதல் தகவல் அறிக்கையில் எஸ்சி/எஸ்டி (வன்கொடுமைத் தடுப்பு) சட்டம் மற்றும் குற்றவியல் மிரட்டல் தொடர்பான பிரிவுகளைத் தில்லி போலீஸார் சேர்த்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ஜூலை 20 அன்று நடத்தப்பட்ட போராட்டத்தின்போது பெண் ஒருவரின் தந்தையின் தலையில் அடித்து காயம் ஏற்படுத்தினார். இதையடுத்து, இந்த விடியோ சமூக ஊடகங்களில் பரவியதையடுத்து இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.
இதையடுத்து, சுவதந்திர பரத்வாஜ் ஒரு நாள் போலீஸ் காவலில் வைக்க தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Hindutva influencer Swatantra Bhardwaj sent to one-day police custody
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







