
இந்துத்துவ ஆதரவாளர் மீது நடவடிக்கை கோரி சிஜேபி போராட்டம்!
ஜந்தர் மந்தரில் சிஜேபி ஆதரவாளர்கள் போராட்டம் பற்றி..

சிஜேபி போராட்டம் - PTI
ஜந்தர் மந்தரில் சிஜேபி போராட்டத்தின்போது சிஜேபி அமைப்பைச் சேர்ந்த நிஷு ஆசாத் என்பவரின் தந்தையான சஞ்சய் குமாரைத் தாக்கிய இந்துத்துவ ஆதரவாளரும் சமூக ஊடகப் பிரபலமுமான ஸ்வதந்த்ர பரத்வாஜ் மீது நடவடிக்கை கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சமூக ஊடகப் பிரபலமுமான ஸ்வதந்த்ர பரத்வாஜ், சஞ்சய் குமாரைத் தாக்கியதாகக் கூறிய நேர்காணல் இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டதைத் தொடர்ந்து இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
நாடாளுமன்ற வீதியின் காவல் நிலையத்திற்கு அருகே சிஜேபியினர் திரண்டுள்ளனர். பரத்வாஜ் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தில்லி காவல்துறை தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ள சிஜேபி, சஞ்சய்க்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
போராட்டக்காரர்கள் தில்லி காவல்துறைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இருப்பினும், சஞ்சயின் தலையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகக் கூறப்படும் தகவலைத் தில்லி காவல்துறை மறுத்துள்ளது.
போராட்டத்தின்போது நடைபெற்ற கைகலப்பில் அவருக்குச் சிறிய அளவிலான காயமே ஏற்பட்டதாகவும், அவரது புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்க, கூடுதல் காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டுத் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், காவல் நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





