ஜந்தர் மந்தரில் மீண்டும் போராட்டமா? வெளியான விடியோ குறித்து தில்லி காவல்துறை விளக்கம்!
ஜந்தர் மந்தரில் மீண்டும் போராட்டம் நடத்தப்பட்டு வருவதாக சமூக ஊடகங்களில் பரவிவரும் விடியோ குறித்து தில்லி காவல்துறை விளக்கம்...

தில்லியில் கூடிய இளைஞர்கள். - கோப்புப் படம்
ஜந்தர் மந்தரில் மீண்டும் போராட்டம் நடத்தப்பட்டு வருவதாக சமூக ஊடகங்களில் பரவிவரும் விடியோ குறித்து தில்லி காவல்துறை ஞாயிற்றுக்கிழமை (ஆக. 23) விளக்கம் அளித்துள்ளது.
தில்லி, ஜந்தர் மந்தரில் ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை நீக்கக் கோரி, காவல்துறையின் அனுமதியின்றி கடந்த வெள்ளிக்கிழமை (ஆக. 21) ’இட ஒதுக்கீட்டு எதிர்ப்பு’ என்ற இயக்கம் போராடியது.
போராட்டத்துக்கு முறையான அனுமதி பெறாததால், போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தும்போது, அவர்களுக்கும் தில்லி காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை நீக்கக் கோரி, ஜந்தர் மந்தரில் இன்றும் போராட்டம் நடைபெறுவதாக சமூக ஊடகத்தில் விடியோ ஒன்று வைரலாகியுள்ளது.
இதுகுறித்து தில்லி காவல்துறை அளித்த விளக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:
இட ஒதுக்கீட்டுக்கு எதிராக ஜந்தர் மந்தரில் திரளான மக்கள் இன்று போராடி வருவதாக சமூக ஊடகங்களில் பரவிவரும் விடியோ பொய்யானது மற்றும் தவறானது. ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த இன்று யாருக்கும் அனுமதி தரப்படவில்லை.
ஜந்தர் மந்தரில் அத்தகைய போராட்டம் எதுவும் நடைபெறவில்லை என்றும், புது தில்லி மாவட்டத்தில் 144 தடை உத்தரவுகள் அமலில் உள்ளன என்றும் தெளிவுபடுத்துகிறோம்.
அதன்படி, பேரணிகள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடும் நிகழ்வுகள் தடை செய்யப்பட்டுள்ளன. சரிபார்க்கப்படாத எந்தவொரு தகவலையும், குடிமக்கள் நம்பவோ, பகிரவோ வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
தவறான செய்திகளைப் பரப்பும் நபர்கள் மீது முறையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
#FACTCHECK
— DCP New Delhi (@DCPNewDelhi) August 23, 2026
Various Videos/posts are being circulated calling upon people to gather/assemble on the issue of reservation reforms for the protest at Jantar Mantar on 23 August.
It is clarified that no permission has been granted to any individual or organisation for holding anyâ¦
Summary
The Delhi Police issued a clarification on Sunday (August 23) regarding a video circulating on social media about a protest being held again at Jantar Mantar.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







