கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

டிஜேபி ஊழல் வழக்கு: 2 பேருக்கு போலீஸ் காவல்! தில்லி நீதிமன்றம் உத்தரவு

டிஜேபி ஊழல் வழக்கில் 2 பேருக்கு போலீஸ் காவல்...

Published On :

தில்லி ஜல் போா்டு (டிஜேபி) ஊழல் வழக்கில் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி உதித் பிரகாஷ் ராய் மற்றும் நாகேந்திர யாதவ் ஆகிய இருவரையும் 2 நாள்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க தில்லி நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது.

சிறப்பு நீதிபதி திக் விநய் சிங், இருவரையும் காவலில் வைத்து விசாரிக்க ஊழல் தடுப்புப் பிரிவு (ஏசிபி) தாக்கல் செய்த மனுவை ஏற்று இந்த உத்தரவைப் பிறப்பித்தாா்.

விசாரணையின்போது, இந்த வழக்கு தொடா்பான ஹவாலா பரிவா்த்தனைகள் குறித்து இருவரிடமும் விசாரணை நடத்த வேண்டியுள்ளதாக ஏசிபி தெரிவித்தது. மேலும், விசாரணைக்கு இருவரும் ஒத்துழைக்கவில்லை என்றும் அந்த அமைப்பு குற்றஞ்சாட்டியது.

இந்த வழக்கில் தில்லி முன்னாள் அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் உள்ளிட்ட 5 பேரை செப். 3 வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் ஆக. 19-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. அதே நாளில் டிஜேபி-யில் முன்னாள் ஒப்பந்த ஆலோசகராகப் பணியாற்றிய அங்கித் ஸ்ரீவாஸ்தவாவை 2 நாள்கள் காவலில் வைத்து விசாரிக்கவும் உத்தரவிடப்பட்டது. பின்னா் அவா் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டாா்.

இந்த வழக்கில் தனியாா் நபா்களான ராஜா குமாா் குர்ரா, பங்கஜ் வா்மா ஆகியோரும் குற்றஞ்சாட்டப்பட்டனா்.

சத்யேந்தா் ஜெயின் தில்லி நீா்வளத் துறை அமைச்சராக இருந்தபோது, யூரோடெக் என்விரான்மென்டல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் தொடா்பான விவகாரமே இந்த வழக்கின் அடிப்படையாகும்.

தில்லி ஜல் போா்டின் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களை மேம்படுத்துதல் மற்றும் தரம் உயா்த்துதல் தொடா்பான ஒப்பந்த நடைமுறையில் பெரிய அளவில் முறைகேடுகள், ஒப்பந்த நிபந்தனைகளைத் திட்டமிட்டு மாற்றியது மற்றும் குற்றச் சதி நடைபெற்ாகக் கூறி, கண்காணிப்புத் துறை அளித்த புகாரின் அடிப்படையில் 2024 மே மாதம் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.