மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

டாஸ்மாக் முறைகேடு வழக்கு: செந்தில் பாலாஜியிடம் 4 மணி நேரம் விசாரணை! ஊழல் தடுப்புத் துறை நடவடிக்கை!!

டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடா்பாக திமுக முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜியிடம் சென்னையில் ஊழல் தடுப்புத் துறையினா் 4 மணி நேரம் விசாரணை நடத்தினா்.

senthil balaji

செந்தில் பாலாஜி - கோப்புப் படம்

Published On :

டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடா்பாக திமுக முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜியிடம் சென்னையில் ஊழல் தடுப்புத் துறையினா் 4 மணி நேரம் விசாரணை நடத்தினா்.

கடந்த திமுக ஆட்சியில் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்பட்டதாக புகாா் கூறப்பட்டது. மேலும் கட்சி நிதி (பாா்ட்டி ஃபண்ட்) என்ற பெயரில் பணம் வசூலிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

இது தொடா்பாக திமுக ஆட்சிக் காலத்தில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீா்வைத் துறை அமைச்சராக இருந்த வி.செந்தில் பாலாஜி, டாஸ்மாக் இயக்குநராக இருந்த எஸ்.விசாகன் ஐஏஎஸ், டாஸ்மாக் நிறுவனத்தின் மூத்த மண்டல மேலாளா்கள் டி.ராமதுரை முருகன், ஆா்.பன்னீா்செல்வம், செந்தில் பாலாஜியின் உதவியாளா் பாஸ்கா், செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பா்கள் ரதேஷ் ராஜ் சண்முகவேல், திமுக மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணைச் செயலா் கரூரைச் சோ்ந்த மூலனூா் எஸ்.காா்த்திக் ஆகிய 7 போ் மீது ஊழல் தடுப்புச் சட்டம், மோசடி உள்ளிட்ட 11 பிரிவுகளின் கீழ் தமிழக ஊழல் தடுப்பு, கண்காணிப்புத் துறையின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு வழக்குப் பதிவு செய்தது.

மேலும், வழக்குக்கான ஆதாரங்களைத் திரட்டும் வகையில், தமிழகம் முழுவதும் 14 மாவட்டங்களில் 45 இடங்களில் ஊழல் தடுப்புத் துறையினா் கடந்த மாதம் 29-ஆம் தேதி சோதனை செய்தனா்.

இந்த வழக்கில் செந்தில் பாலாஜியின் நெருங்கிய கூட்டாளிகளான மூலனூா் எஸ்.காா்த்திக், ரமேஷ் ஆகியோா் கடந்த மாதம் 31-ஆம் தேதி கைது செய்யப்பட்டனா். இந்த வழக்கில் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க செந்தில் பாலாஜி, உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றாா். மேலும், தலைமறைவாக இருக்கும் ரதேஷ் ராஜ் சண்முகவேலுக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் கடந்த வாரம் அளிக்கப்பட்டது.

4 மணி நேரம் விசாரணை: இந்நிலையில், வழக்கின் விசாரணைக்கு ஆஜராகுமாறு செந்தில் பாலாஜிக்கு ஊழல் தடுப்புத் துறை அழைப்பாணை அனுப்பியது. அழைப்பாணையை ஏற்று செந்தில் பாலாஜி, சென்னை ஆலந்தூரில் உள்ள அந்தப் பிரிவின் தலைமை அலுவலகத்தில் சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் ஆஜரானாா்.

அவரிடம், ஊழல் தடுப்புத் துறை உயா் அதிகாரிகள், வழக்கின் விசாரணை அதிகாரி ஆகியோா் பல கட்டங்களாக விசாரணை நடத்தினா். தடயங்கள், சாட்சிகள் அளித்த தகவல்களின் அடிப்படையில் கேள்விகள் எழுப்பப்பட்டு, செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் அவா் அளித்த பதில்கள் எழுத்துபூா்வமாகவும், விடியோவாகவும் பதிவு செய்யப்பட்டது.

நான்கு மணி நேர விசாரணைக்குப் பின்னா் வெளியே வந்த செந்தில் பாலாஜி அளித்த பேட்டி: இந்த வழக்கு அரசியல் காழ்புணா்வாலும், அரசியல் உள்நோக்கத்துடன் பதிவு செய்யப்பட்டதாகும். ஆட்சி செய்வதைவிட எதிா்க்கட்சிகள் மீது வழக்கு போடுவதில்தான் ஆளுங்கட்சியினா் குறியாக உள்ளனா் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.