FOLLOW US

ON GOOGLE DISCOVER

காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சுமேட்டூரிலிருந்து காவிரி நீர் கல்லணை வந்தது! நாளை காலை திறப்பு!நேபாள பெருவெள்ளம்! தஞ்சையில் மரபணு சேகரிப்பு பணி தொடக்கம்!!தவெக ஆதரவு கட்சிகள் கூட்டம்: காங்கிரஸுக்கு நேரில் அழைப்பு விடுத்த அமைச்சர்கள்!உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

எதிர்திசையில் வாகனம் ஓட்டினால்... மாற்றி யோசித்த போக்குவரத்துக் காவல்துறை! திறந்தது மூன்றாம் கண்!

சாலையில் எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவர்களைக் கண்காணித்து அபராதம் விதிக்க மாற்று திட்டங்களை செயல்படுத்தி வருவது பற்றி..

கோவை மாவட்ட போக்குவரத்து காவல்துறை

வாகன ஓட்டிகள் - file photo

Published On :5 செப்டம்பர் 2026, 12:20 pm IST

போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள சென்னையின் பல முக்கிய இடங்களில் சில நொடி பயணத்தைத் தவிர்க்க எதிர் திசையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளைப் பிடிக்க புதிய உக்தியை கொண்டு வந்திருக்கிறது போக்குவரத்துக் காவல்துறை.

சிறிது தொலைவில் இருக்கும் யு-டர்னைத் தவிர்க்க, வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் எதிர் திசையில் வாகனத்தை ஓட்டும் பலரும் சென்னையின் போக்குவரத்துக் காவல்துறைக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளனர்.

எப்போதும், போக்குவரத்துக் காவல்துறையினர் நின்றுகொண்டு வாகன ஓட்டிகளை மடக்கிப் பிடித்து அபராதம் விதித்துக் கொண்டேயிருக்க முடியுமா?

பொதுவாக அண்ணாசாலை, வேளச்சேரி 100 அடி சாலை, பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலை, ராஜீவ் காந்தி சாலை, வடபழனி, கிண்டி என போக்குவரத்து நெரிசல் அதிகம் கொண்ட பகுதிகளில் எல்லாம் இதுபோன்று எதிர் திசையில் பயணிப்பவர்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது.

இதனால், என்ன பெரிய தவறு என்று கேட்டால், இதுபோன்ற எதிர்திசையில் வந்த வாகனங்கள் மோதி பலியானவர்களின் எண்ணிக்கை அதிகம்.

இதனைத் தடுக்க போக்குவரத்துக் காவல்துறை இதுவரை பல நடவடிக்கைகளை எடுத்துவிட்டன. ஆனாலும் பயனில்லை. போக்குவரத்துக் காவலர்கள் அப்படி மறைந்ததும், இப்படி புகுந்து சென்று விடுகிறார்கள்.

எனவே, இதுபோன்ற இடங்களில் சாலைத் தடுப்புகள் வைக்கப்படும். அதற்குள் ஒரு கேமராவும் மறைத்து வைக்கப்பட்டிருக்கும். அதன் மூலம், எதிர்திசையில் வரும் வாகனங்களின் பதிவெண்கள் பதிவாகி, உரிய அபராதத் தொகை விதிக்கப்பட்டு அவர்களுக்கு செல்போனில் குறுந்தகவல் அனுப்பப்படும். இந்த வகையில், கடந்த எட்டு மாதங்களில் மட்டும் சுமார் 8 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாம். எனவே, எதிர் திசையில் செல்வது தவறு என்பதை உணர்ந்து வாகன ஓட்டிகள் பொறுப்புடன் செயல்படுவது அபராதத்திலிருந்து தப்பிக்க உதவும் என்கிறார்கள் போக்குவரத்துக் காவலர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.