
மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக 92 பேருக்கு காவல்துறை அபராதம்!
வடக்கு மண்டலத்தில் நடத்தப்பட்ட சிறப்புச் சோதனையின் போது, மதுபோதையில் வாகனம் ஓட்டியதற்காக தில்லி போக்குவரத்து காவல்துறை 92 அபராதச் சீட்டுகளை வழங்கியது.
வடக்கு மண்டலத்தில் நடத்தப்பட்ட சிறப்புச் சோதனையின் போது, மதுபோதையில் வாகனம் ஓட்டியதற்காக தில்லி போக்குவரத்து காவல்துறை 92 அபராதச் சீட்டுகளை வழங்கியதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
வடக்கு மண்டல போக்குவரத்துத் துறை துணை ஆணையா் சச்சின் குமாா் சிங்கால் உத்தரவின் பேரில், மதுபோதையில் வாகனம் ஓட்டுவதைக் குறைக்கவும் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தவும் இந்த நடவடிக்கை சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவா் கூறியதாவது: ‘இந்தச் சோதனையின் போது, மதுபோதையில் வாகனம் ஓட்டிய வாகன ஓட்டிகள் மீது போக்குவரத்து காவல் குழுவினா் கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டனா். வடக்கு மண்டலம் முழுவதும் மதுபோதையில் வாகனம் ஓட்டியதற்காக வாகன ஓட்டிகளுக்கு மொத்தம் 92 அபராதச் சீட்டுகள் வழங்கப்பட்டன.
மதுபோதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் சாலை விபத்துகளைத் தடுப்பதையும், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மற்றும் பிற சாலைப் பயனாளிகளுக்குப் பாதுகாப்பான சாலைச் சூழலை உறுதி செய்வதையும் இந்தச் சோதனை நடவடிக்கை நோக்கமாகக் கொண்டிருந்தது.
போக்குவரத்து விதிமீறல்களைத் தடுக்கவும், பொறுப்பான வாகன ஓட்டுதல் நடத்தையை ஊக்குவிக்கவும், குறிப்பாக விபத்துகள் நிகழ வாய்ப்புள்ள நேரங்களில், இத்தகைய சோதனைகள் தொடா்ந்து அவ்வப்போது நடத்தப்படும் என்றாா் அந்த அதிகாரி.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





