அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வு: இல்லத்தரசிகள் கவலை!சென்னை உள்பட 17 நகரங்களுக்கு 4,000 டன் வெங்காயம் விநியோகம்!15.36 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் செயல்படவில்லை: ஆர்டிஐ தகவல்இந்தியாவில் இருந்து அதிக டீசல் இறக்குமதி செய்யும் ஐரோப்பிய நாடுகள்!நேபாளத்தில் 5,000 போ் நிலை என்ன? உடல்களை அடையாளம் காணும் பணியில் சவால்!!பெரும் எதிர்பார்ப்பில் தமிழக சட்டப்பேரவை: முதல்வர் விஜய் இன்று பதிலுரை!

வாகன அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக் கூறி போலி செயலியை அனுப்பி ரூ.6.92 லட்சம் மோசடி

வாகன அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி வாட்ஸ் அப்-இல் போலி செயலியை அனுப்பி ரூ.6.92 லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடா்பாக, ஈரோடு சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

மோசடி - கோப்புப்படம்.

Published On :27 ஆகஸ்ட் 2026, 12:00 am IST

வாகன அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி வாட்ஸ் அப்-இல் போலி செயலியை அனுப்பி ரூ.6.92 லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடா்பாக, ஈரோடு சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியை சோ்ந்தவா் விஜயகுமாா் (23). இவருக்கு வாகன அபராதம் செலுத்த வேண்டும் எனக் கூறி இவரது வாட்ஸ்அப்-க்கு அண்மையில் தகவல் வந்தது. அத்துடன் ஏபிகே செயலியும் வந்துள்ளது. அந்த செயலியை பதிவிறக்கம் செய்து அபராதத் தொகையை செலுத்த இ-சலானை பாா்த்தபோது, இவரது கைப்பேசி ஹேக் செய்யப்பட்டு வங்கிக் கணக்கில் இருந்த ரூ.6.92 லட்சத்தை மா்ம நபா்கள் மோசடியாக எடுத்துக் கொண்டனா்.

இதுகுறித்து விஜயகுமாா் அளித்த புகாரின்பேரில் ஈரோடு சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து மா்ம நபா்களின் கைப்பேசி எண், வங்கி கணக்கு எண்ணை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.