
நேபாள பெருவெள்ளம்! தஞ்சையில் மரபணு சேகரிப்பு பணி தொடக்கம்!!
நேபாள பெருவெள்ளத்தில் சிக்கியவர்களின் உடல்களை அடையாளம் காணும் வகையில் தஞ்சையில் மரபணு சேகரிப்பு பணி தொடங்கியது.

தஞ்சையில் மரபணு சேகரிப்பு பணி - video grab
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நேபாளம் சென்று வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் உடல்களை அடையாளம் காணும் வகையில், மரபணு மாதிரி சேகரிப்பு பணிகள் இன்று தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தொடங்கியது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள சூப்பர் யாத்திரை ட்ராவல் ஏஜென்சி மூலம் 57 பேர் நேபாள நாட்டிற்கு சுற்றுலா சென்றனர். இந்த நிலையில் அங்கு ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் சிக்கி 21 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், 36 பேரின் நிலை இதுவரை என்னவென்று தெரியவில்லை.
விபத்து நடைபெற்று 10 நாள்களுக்கு மேல் ஆன நிலையில் 36 பேரின் நிலை இதுவரை என்னவென்று தெரியவில்லை. இந்நிலையில் காணாமல் போனவர்களை கண்டறிவதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் டிஎன்ஏ மாதிரி சேகரிப்பு பணிகள் இன்று நடைபெறுகிறது.
இதில் தஞ்சாவூர், திருவாரூர், புதுச்சேரி உள்ளிட்ட 8 மாவட்டங்களைச் சேர்ந்த குடும்ப உறவினர்களை தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துள்ளனர். மருத்துவர் தமிழ்மணி தலைமையில் இந்த மாதிரி சேகரிப்பு பணிகள் இன்று நடைபெறுகிறது.
இதற்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சட்டம் சார்ந்த மருத்துவம் மற்றும் நஞ்சியியல் துறை பிரிவில் இந்த பணிகள் நடைபெறுகிறது.
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த மாதிரி சேகரிப்பில் உறவினர்கள் எப்போது வேண்டுமானாலும் வந்து தங்களுடைய மரபணு மாதிரிகளை கொடுக்கலாமென கூறப்பட்டுள்ளது.
மூன்று முதல் ஐந்து நாள்களுக்குள் பரிசோதனை முடிவுகள்!
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் மணிமேகலை டி.என்.ஏ. மாதிரி சேகரிக்கும் பணிகளை பார்வையிட்டு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், டிஎன்ஏ மாதிரி சேகரிக்கும் பணி இன்று தொடங்கியுள்ளது. இது காலவரம்பு நிர்ணயம் செய்யவில்லை. குடும்பத்தினரும் - உறவினர்கள் எப்போது வேண்டுமானாலும் வந்து தங்களுடைய ரத்த மாதிரிகளை இங்கு கொடுக்கலாம். இந்த பரிசோதனைகள் நடைபெற்று மூன்று முதல் ஐந்து நாள்களுக்குள் முடிவுகள் வெளியாகும். காணாமல் போனவர்களின் பிள்ளைகள் பெற்றோர்கள் இரத்த மாதிரி கொடுக்கலாம்.
குழந்தைகள் இல்லாதவர்களின் சகோதரர்கள் வந்து ரத்த மாதிரி கொடுக்கலாம் என கல்லூரி முதல்வர் மணிமேகலை தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






