உஸ்பெகிஸ்தானில் பிரதமா் மோடிக்கு உற்சாக வரவேற்பு! கிா்கிஸ்தானில் எஸ்சிஓ மாநாட்டில் நாளை பங்கேற்பு!நேபாள வெள்ளம்: பலி 675-ஆக உயா்வு! தொடரும் மீட்புப் பணி; 2,400 போ் நிலை என்ன?2027-28 பட்ஜெட் பணிகள் அக்.12-இல் தொடங்கும்: மத்திய நிதியமைச்சகம்தென் மாவட்டங்களுக்குச் செல்லும் 14 சிறப்பு விரைவு ரயில்கள் நீட்டிப்பு ஆசியக் கோப்பை மகளிா் டி20: தாய்லாந்துடன் இன்று இந்தியா மோதல்சென்னையில் மழைவெள்ள மீட்பு நடவடிக்கைக்கு 1,721 போ்!

நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!

நேபாள பெருவெள்ளத்தில் காணாமல் போனவர்களை மீட்கும் பணிகள் 5 வது நாளாக தொடர்ந்து வருவது குறித்து...

People affected by the massive floods in Nepal.

நேபாள பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள். - படம் - ஏபி

Published On :49 வினாடிகள் முன்பு

நேபாள பெருவெள்ளத்தில் காணாமல் போனவர்களை மீட்கும் பணிகள் 5 வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில், பலி எண்ணிக்கை 682 ஆக அதிகரித்துள்ளது.

நேபாள - திபெத் எல்லையில் பனிப்பாறைகள் உடைந்து நேபாளத்தின் போடே கோஷி ஆற்றில் கடந்த ஆக. 26 ஆம் தேதி திடீரென பெரு வெள்ளம் ஏற்பட்டதில் அங்குள்ள பாலங்கள், கட்டடங்கள் உள்ளிட்டவை அடித்துச் செல்லப்பட்டன.

உலகின் பல நாடுகளைச் சேர்ந்த மக்கள் காணாமல் போன நிலையில், அவர்களைத் தேடும் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பலி எண்ணிக்கை 682 ஆக உயர்ந்துள்ளது.

நேபாள அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 30) வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, நேபாளம் மற்றும் திபெத்தில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 691 ஆக உள்ளது. நேபாளத்தில், நூற்றுக்கணக்கான வெளிநாட்டினர் உள்பட 2,426 பேர் இன்னும் காணாமல் போயுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.

அதே வேளையில், திபெத்தில் 16 பேர் பலியானதாகவும், 546 பேர் காணாமல் போயுள்ளதாகவும் சீன அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தப் பேரிடரால் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு உலகின் பல நாடுகள் மீட்புப் பணிகளுக்கு தங்களுடைய வீரர்களை அனுப்புதல், நிவாரணப் பொருள்கள் வழங்குதல் உள்ளிட்ட உதவிகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Summary

As rescue operations for those missing in the massive Nepal floods continue for the fifth day, the death toll has risen to 682.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.