
நேபாள வெள்ளம்! 19 வெளிநாடுகளைச் சேர்ந்த 77 ஈஷா பக்தர்களின் நிலை என்ன?
நேபாள வெள்ளத்தில் காணாமல் போன ஈஷா அமைப்பின் பக்தர்கள் 77 பேர் குறித்து எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை...

நேபாள வெள்ளம் - ஈஷா மையம் - கோப்புப் படம் | ஏபி
நேபாள வெள்ளத்தில் சிக்கி காணாமல் போன ஈஷா அமைப்பின் பக்தர்கள் 77 பேரின் நிலைகுறித்து இதுவரை எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.
திபெத்தில் பனிப்பாறைகள் உடைந்ததால், நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் உள்ள போடே கோஷி கடந்த ஆக. 26 ஆம் தேதி ஆற்றில் திடீர் வெள்ளம் ஏற்பட்டு ஆயிரக்கணக்கான கட்டடங்கள் மற்றும் பாலங்கள் சேதமடைந்துள்ளன.
இந்தப் பேரிடரில், 600-க்கும் அதிகமானோர் பலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 1,500 பேரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், கைலாச மலைக்கு ஆன்மீகப் பயணம் மேற்கொண்ட மதகுரு ஜக்கி வாசுதேவ் (எ) சத்குரு தலைமையிலான ஈஷா மையத்தின் 77 பக்தர்கள் கிரோங் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி காணாமல் போனார்கள்.
இந்தப் பேரிடர் ஏற்பட்டு 2 நாள்களாகத் தொடர்ந்து மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், 77 ஈஷா பக்தர்களின் நிலைகுறித்து இதுவரை எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை என அந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, காணாமல் போன அந்தக் குழுவில் 19 வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் இடம்பெற்றிருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
இதன்படி, அமெரிக்கா - 22 பேர், கனடா - 12 பேர், ஆஸ்திரேலியா - 11 பேர், பிரிட்டன் - 9 பேர், ஜெர்மனி - 4 பேர், பிரான்ஸ் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த தலா 3 பேர், நெதர்லாந்து, நியூசிலாந்து, சிங்கப்பூர், ஸ்பெயின் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா 2 பேர், பின்லாந்து, ஹங்கேரி, இஸ்ரேல், லிதுவேனியா, பிலிப்பின்ஸ், போர்ச்சுகல், ரஷியா மற்றும் தென்னாப்பிரிக்கா நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவரும் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
no information has been received so far regarding the status of the 77 Isha Yoga Center devotees who went missing in the floods in Nepal.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







