FOLLOW US

ON GOOGLE DISCOVER

ரயில் சூட்கேஸில் சடலம்! பிரியாணி டபராவில் மனித உடல்! முக்கிய குற்றவாளி கைது!!

ரயில் சூட்கேஸில் சடலம், பிரியாணி டபராவில் வேகவைக்கப்பட்ட மனித உடல் மீட்கப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலையாளிகளின் சிசிடிவி காட்சிகள்

கொலையாளிகளின் சிசிடிவி காட்சிகள்

Published On :29 ஆகஸ்ட் 2026, 11:29 am IST

சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியில் பெண்ணைக் கொன்று உடல் பாகங்களை சூட்கேஸில் அடைத்து ரயிலில் ஏற்றி, மற்ற பாகங்களை பிரியாணி டபராவில் வேக வைத்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையிலிருந்து புது தில்லி சென்ற ரயிலில் சூட்கேஸில் சடலம் கண்டெடுக்கப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் தங்கியிருந்த வீட்டை சோதனை செய்த போது, மனித உடல்களை வெட்டி பிரியாணி டபராவில் வேக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் கடந்த 15 நாள்களுக்கும் மேலாக தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளிகள் இரண்டு பேரில் ஒருவரை மணிப்பூரில் கைது செய்தது காவல்துறை.

சென்னை கூடுவாஞ்சேரியில் பெண்ணை கொலை செய்துவிட்டு தப்பியோடிய அசாமைச் சேர்ந்த் மாணிக் உத்தின் லஸ்கர் என்பவரை மணிப்பூரில் காவல்துறை கைது செய்துள்ளது.

சூட்கேஸை, சென்னை சென்டிரல் ரயில் நிலையம் சென்று புது தில்லி சென்ற ரயிலில் வைத்த போது பதிவான சிசிடிவி பதிவுகளில், ஒரு ஆணும் பெண்ணும் சூட்கேஸை கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் தேடப்பட்டு வந்த நிலையில் முக்கிய குற்றவாளி மாணிக் உத்தின் லஸ்கர் மட்டும் மணிப்பூரில் கைதாகியிருக்கிறார். உடன் இருந்த பெண் பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை.

ஆகஸ்ட் முதல் வாரத்தில் சென்னை சென்ட்ரலில் இருந்து புது தில்லி சென்ற விரைவு ரயிலில் சூட்கேஸில் சடலம் கண்டெடுக்கப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் தங்கியிருந்த வீட்டைக் கண்டுபிடித்த காவல்துறையினருக்கு அங்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது.

கூடுவாஞ்சேரியில் குற்றவாளிகள் தங்கியிருந்த வீட்டுக்குள் ஒரு பெரிய பிரியாணி டபரா மூடி போட்டு, மைதாமாவால் சீல் வைக்கப்பட்டிருந்துள்ளது. டபாராவுக்குள் மனித உடல் பாகங்கள் வேக வைக்கப்பட்டிருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.

உடனடியாக பிரியாணி டபரா ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

முதலில் கொலையானவர் ஆண் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது பெண் என்பது தெரிய வந்துள்ளது.

குற்றவாளிகளின் சிசிடிவி புகைப்படங்களை காவல்துறை வெளியிட்ட நிலையில், கூடுவாஞ்சேரியில் இவர்கள் தங்கியிருந்ததாக சிலர் அளித்த தகவலைத் தொடர்ந்து வீட்டில் ஆய்வு செய்தனர்.

கொலை செய்யப்பட்டவர் ஹைதுல் நிஷா என்பதும் இவர் தாம்பரம் பகுதியைச் சேர்ந்தவர், கொலையாளிகளுடன் தங்கியிருந்த நிலையில் காணாமல் போனதாக அவரது மகன் காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்.

கொலையாளிகள் மாணிக் உத்தின் லஸ்கர், அவரது மனைவி பகமதி மாஜிக் என்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களது செல்போன் சிக்னல் மூலம், ஒடிசா தப்பிச் சென்றிருப்பதை அறிந்த காவல்துறையினர், அவர்களைக் கைது செய்ய ஒடிசா விரைந்தனர். ஆனால், அவர்கள் அங்கிருந்து மணிப்பூர் தப்பிய நிலையில், காவல்துறை மணிப்பூர் சென்று முக்கிய குற்றவாளிகளில் ஒருவரை கைது செய்திருக்கிறார்கள்.

வெளியான சிசிடிவி காட்சிகள் உதவியது

சூட்கேஸில் மனித சடலம் கண்டெடுக்கப்பட்ட வழக்கில், 350 சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறை, சூட்கேஸை வைத்துச் சென்ற ஆண் - பெண் ஜோடியை கண்டறிந்தனர். அவர்களது விவரம் தெரிய வராததால், அவர்களது விடியோ காட்சிகளை சென்னை காவல்துறை வெளியிட்டதன் மூலம் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது.

ஆக்ரா சென்ற ரயிலில் வைக்கப்பட்டிருந்த மனித உடல் துண்டுகள் சென்னை துணிக்கடைப் பையில் இருந்ததை வைத்துத்தான், ஆக்ரா காவல்துறை சென்னையிலிருந்து அந்த சூட்கேஸ் ரயிலில் ஏற்றப்பட்டிருக்கலாம் என்று கண்டறிந்து சென்னை காவல்துறைக்கு தகவல் கொடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Corpse in a train suitcase! Human body in a biryani vessel! Key suspect arrested!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.