சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புது தில்லி சென்ற விரைவு ரயிலில் சூட்கேஸில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் சென்னை காவல்துறையினர் 350 சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, சூட்கேஸை வைத்துச் சென்ற தம்பதியை கண்டறிந்துள்ளனர்.
சூட்கேஸில் இருந்த சென்னை துணிக்கடைப் பையை வைத்துத்தான், ஆக்ரா காவல்துறை சென்னையிலிருந்து சூட்கேஸ் ரயிலில் ஏற்றப்பட்டிருக்கலாம் என்று கண்டறிந்து சென்னை காவல்துறை தகவல் கொடுத்துள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.
சென்னை சென்டிரல் மற்றும் சென்னை பூங்கா ரயில் நிலையம் வரையிலான 350 சிசிடிவி கேமராக்களை, காவல்துறையினர் ஆய்வு நடத்தி, சூட்கேஸை எடுத்து வந்து வைத்துவிட்டுச் சென்ற தம்பதியை கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆனாலும், அந்த தம்பதியின் அடையாளமோ, கொலை செய்யப்பட்டவர் யார் என்ற விவரமோ இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. விரைவில் கண்டுபிடிக்கப்படலாம் என்று தெரிகிறது.
சில நாள்களுக்கு முன்பு சென்னை சென்ட்ரல் நிலையத்தில் இருந்து புது தில்லி சென்ற தமிழ்நாடு விரைவு ரயில் ஆக்ராவில் நின்றது. அப்போது, ஒரு பெட்டியில் கேட்பாரற்று கிடந்த சூட்கேஸில் ஆண் சடலம் இருப்பது கண்டறியப்பட்டது. அதில் இருந்த நெகிழிப்பை உள்ளிட்டவற்றில் சென்னை முகவரி இருந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து ஆக்ரா நிலைய ரயில்வே பாதுகாப்புப் படையினா் சென்னை இருப்புப் பாதை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
அந்த சூட்கேஸில் சென்னையைச் சேர்ந்த மிகப்பெரிய துணிக் கடையின் நெகிழி பையும், ரசீது ஒன்றும் இருந்துள்ளது. எனவே, சூட்கேஸில் இருக்கும் உடலின் புகைப்படங்கள் மற்றும் பல விவரங்களை சென்னை காவல்துறை கோரியிருக்கிறார்கள். அதன்படி உயிரிழந்தவரின் அடையாளத்தைக் கண்டுபிடிக்கும் பணியும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
கொலையானவரின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டால், கொலையாளிகளை எளிதாக அடையாளம் காணலாம் என்றும் காவல்துறை திட்டமிட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு மேமராக்களின் காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. அதன்படி கடந்த சில நாள்களுக்கு முன் ஆண் - பெண் இருவர், ஒரு சிவப்பு நிற சூட்கேஸுடன் சென்ட்ரல் நிலையத்துக்கு வருவதும், அவா்கள் தமிழ்நாடு விரைவு ரயில் பெட்டியில் அதை வைத்து விட்டு, ரயில் புறப்படுவதற்கு முன்பே அதிலிருந்து இறங்கி, சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து, பூங்கா ரயில் நிலையம் நோக்கிச் செல்வதும் கண்டறியப்பட்டது.
இவ்விரு ரயில் நிலையங்களுக்கு இடையேயான 350 சிசிடிவி கேமராக்கள் இதற்காக ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டது. அவர்கள் பூங்கா ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம் செல்லும் ரயிலில் ஏறிச் செல்வதும் பதிவாகியிருக்கிறது.
எனவே, பூங்கா ரயில் நிலையத்திலிருந்து, தாம்பரம் ரயில் நிலையம் வரையிலான அனைத்து ரயில் நிலையங்களிலும் பதிவாகியிருக்கும் சிசிடிவி பதிவுகள் ஆய்வுக்குட்படுத்தப்படும் பணி நடைபெற்று வருகிறது. அவா்களது முகத்தை வைத்து அடையாளம் காண இருப்புப் பாதை போலீஸாா் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தனா்.
ஒரு சில நாள்களில் அவர்கள் யார் என்பது கண்டுபிடிக்கப்பட்டு, வழக்கை சென்னைக்கு மாற்றுவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று தெரிகிறது.
Summary
Body in Suitcase on Train: Chennai Textile Shop Bag Betrays the Killers
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ரயிலில் சூட்கேஸில் ஆண் சடலம்: ரயில்வே போலீஸாா் தீவிர விசாரணை
அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் விஜய் ஆய்வு!

சப்தமாக பாடல் கேட்டால்.. மெட்ரோ பயணிகளுக்கு முக்கிய தகவல்!
விடியோக்கள்

என்னால் நல்ல பயிற்சியாளராக இருக்க முடியும்: மனம் திறந்த ரஹானே | Rahane |



