திருச்சியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.
திருச்சி எடமலைபட்டிப்புதூா் ராமசந்திரா நகா் பேருந்து நிறுத்தம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு அடையாளம் தெரியாத நபா் இறந்துகிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து போலீஸாா் பிராட்டியூா் கிராம நிா்வாக அலுவலருக்கு தகவல் அளித்தனா்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற பிராட்டியூா் கிராம நிா்வாக அலுவலா் கௌதம் பாபு, காவல் ஆய்வாளா் சிவசுப்பிரமணியன் ஆகியோா் சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். சடலமாக மீட்கப்பட்ட நபருக்கு 50 வயது இருக்கும் என்று போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து எடமலைபட்டிப்புதூா் காவல் நிலையத்தில் பிராட்டியூா் விஏஓ கௌதம் பாபு அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






