உங்கள் வங்கிக் கணக்கை பயன்படுத்திக் கொள்கிறோம், அதற்கு மாறாக உங்களுக்கு பணம் தருவதாக யாராவது சொல்கிறார்களா? அப்படி என்றால், எச்சரிக்கையாக இருங்கள் என்று ஆர்பிஐ அறிவுறுத்தியிருக்கிறது.
நாடு முழுவதும் பல்வேறு சைபர் குற்றங்களும், மோசடிகளும் நடைபெற்று வருகின்றன. இந்த மோசடிகளின்போது, பணப் பரிமாற்றம் நடந்த வங்கிக் கணக்கை வைத்து குற்றவாளிகளைப் பிடித்து விடலாம் என்பதால், இதுபோன்று மோசடிக் கும்பல்கள், அப்பாவி மக்களிடம் உங்கள் வங்கிக் கணக்கைப் பயன்படுத்திக் கொள்கிறோம், அதற்கு பணம் தருகிறோம் என்று கூறி ஏமாற்றி, அவர்கள் வங்கிக் கணக்கு மூலம் பண மோசடிகளில் ஈடுபடுகிறார்கள்.
இந்த நிலையில், ஆர்பிஐ மக்களுக்கு வெளியிட்டிருக்கும் அறிவுறுத்தலில், உங்கள் வங்கிக் கணக்கை பயன்படுத்துவதற்காக யாராவது உங்களுக்கு சுலபமாக பணம் தருவதாகச் சொல்கிறார்களா?
அவர்கள் சட்ட விரோதமாக பணத்தை பரிமாற்றுபவர்களாக (money mule) இருப்பார்கள், அவர்களுக்கு உதவு செய்பவர்களாக நீங்கள் இருக்காதீர்கள் என்று தெரிவித்துள்ளது.
பணம் பரிமாற்றுபவர் (money mule) சட்டவிரோதமாகப் பெற்ற பணத்தை ஒருவர் சார்பாக மற்றவர்களுக்குப் பரிமாற்றம் செய்பவர் ஆவார். எனவே, உங்கள் வங்கிக் கணக்கைக் கொடுத்து குற்றவாளியாக மாற வேண்டாம்.
உங்கள் வங்கிக் கணக்கு = உங்கள் பணம்
பணம் பரிமாற்றம் செய்வதற்காக உங்கள் வங்கிக் கணக்கை வேறு யாரும் பயன்படுத்த அனுமதிக்காதீர்கள்.
உங்கள் வங்கிக் கணக்கில் மற்றவர்கள் பணத்தைப் பெறவோ அல்லது அனுப்பவோ அனுமதிப்பது உங்களைச் சிறைக்கு அனுப்பக்கூடும்.
அதுபோல, குற்றவாளியும் ஆகாதீர்கள், ஓடிபியை பகிர்ந்து ஏமாளியும் ஆக வேண்டாம்.
உங்கள் வங்கி விவரங்கள், ஓடிபி அல்லது கடவுச்சொற்களை எப்போதும் யாருடனும் பகிராதீர்கள்.
உங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாத்திடுங்கள். அது நேரடியாக உங்களைப் பாதுகாத்திடும் முறை என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
சுலபமாக பணம் சம்பாதிப்பது ஆபத்தில் முடியலாம். மேலும் தகவலுக்கு இங்கே கிளிக் செய்யவும் rbikehtahai.rbi.org.in
ஆர்பிஐ சொல்கிறது - விவரமாக, எச்சரிக்கையாக இருங்கள் என்று அந்த தகவலில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆர்பிஐ வேலைக்குத் திரும்பிய இஷான் கிஷன்..! வைரலாகும் புகைப்படங்கள்!

பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்? ஆர்பிஐ தகவல்

விரைவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!

உங்கள் வங்கிக்கணக்கைப் பயன்படுத்த பணம் தருகிறார்களா? ஆர்பிஐ எச்சரிக்கை!
விடியோக்கள்

என்னால் நல்ல பயிற்சியாளராக இருக்க முடியும்: மனம் திறந்த ரஹானே | Rahane |



