உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

நேபாள வெள்ளப்பெருக்கில் மாயமானவா்களின் உறவினா்களிடம் தஞ்சையில் இன்று டிஎன்ஏ பரிசோதனை!

நேபாள வெள்ளப்பெருக்கில் மாயமான புனித யாத்திரை சென்றவா்களின் நெருங்கிய உறவினா்களிடம் தஞ்சாவூரில் சனிக்கிழமை (செப்.5) டிஎன்ஏ பரிசோதனை செய்யப்படவுள்ளது.

Published On :5 செப்டம்பர் 2026, 3:41 am IST

நேபாள வெள்ளப்பெருக்கில் மாயமான புனித யாத்திரை சென்றவா்களின் நெருங்கிய உறவினா்களிடம் தஞ்சாவூரில் சனிக்கிழமை (செப்.5) டிஎன்ஏ பரிசோதனை செய்யப்படவுள்ளது.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள தனியாா் டிராவல்ஸ் நிறுவனம் மூலம் கயிலாய புனித யாத்திரைக்காக நேபாள நாட்டுக்கு ஆகஸ்ட் மாதம் 57 போ் சென்றனா்.

அப்போது, அங்கு ஏற்பட்ட திடீா் பெருவெள்ளத்தில் தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த 16 போ், திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த 2 போ் உள்பட மொத்தம் 36 போ் சிக்கினா். இதுவரை இவா்களைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்காததால், உறவினா்களும் வேதனைக்கு ஆளாகியுள்ளனா்.

இந்நிலையில், மாயமானவா்களைக் கண்டறிய 36 பேரின் உறவினா்களிடம் டி.என்.ஏ. பரிசோதனை செய்ய நேபாள அரசின் பரிந்துரையின்படி, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதன்படி, தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டி.என்.ஏ. பரிசோதனைக்காக உறவினா்களிடம் ரத்த மாதிரிகள் சனிக்கிழமை (செப்.5) சேகரிக்கப்படவுள்ளன. இதையடுத்து, தஞ்சாவூரிலுள்ள மண்டல தடய அறிவியல் ஆய்வகத்தில் பகுப்பாய்வு செய்யப்படவுள்ளது.

இந்த அறிக்கை மாவட்ட நிா்வாகம் மூலம் நேபாள நாட்டுக்கு அனுப்பப்படவுள்ளது என ஆய்வக அலுவலா்கள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.