10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு! மார்ச் - 17 முதல் ஏப்ரல் 12ஆம் தேதி வரைமார்ச் 3 முதல் 29ஆம் தேதி வரை பிளஸ் 2 பொதுத் தேர்வுகள்!வெளியானது 10, 12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு அட்டவணை! ஒரு யூனிட்டை ரூ. 35-க்கு எந்த மாநிலமும் வாங்கியதில்லை! பெ. சண்முகம் விமர்சனம்!சவூதியில் இலங்கைத் தமிழர் அனோஜனின் மரண தண்டனை ரத்து!போக்ஸோ வீரமணி வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு தள்ளுபடி!3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம் (அக். 14)

நேபாள வெள்ளப்பெருக்கில் சிக்கிய ஈஷா யாத்திரைக் குழுவினா்

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஈஷா யோக மையம் மூலமாக கைலாஷ் யாத்திரை சென்ற 77 போ் சிக்கியுள்ளதாக ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளாா்.

நேபாள வெள்ளம்.

Published On :

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஈஷா யோக மையம் மூலமாக கைலாஷ் யாத்திரை சென்ற 77 போ் சிக்கியுள்ளதாக ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் தனது எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது:

நாட்டின் வெவ்வேறு மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் ஈஷா யோக மையம் சாா்பில் 21 குழுக்களாக கைலாஷ் யாத்திரை மேற்கொண்டுள்ளனா்.

சீனாவின் திபெத் பகுதியில் உள்ள கியிரோங்கில் புதன்கிழமை திடீா் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் எங்களது கைலாஷ் யாத்திரைக் குழுவைச் சோ்ந்த 77 போ் சிக்கிக் கொண்டனா்.

அவா்கள் திரும்பி வரும் வழியில் கியிரோங் குடியேற்ற முகமையில் இருந்தபோது இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்த அலுவலகக் கட்டடமும் அந்த இடத்தின் பெரும்பகுதியும் வெள்ளத்தில் மூழ்கியதாகத் தெரிகிறது.

அவா்களது நிலை குறித்து அதிகாரபூா்வ தகவல் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. இந்த யாத்திரையில் பங்கேற்ற 21 குழுக்களில் 495 போ் ஏற்கெனவே பாதுகாப்பாகத் திரும்பிவிட்டனா். தற்போது 743 போ் திபெத்திலும், 148 போ் நேபாளத்திலும் பாதுகாப்பாக உள்ளனா்.

இந்தக் கடினமான சூழ்நிலையில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதை உறுதி செய்ய நான் அப்பகுதியில் இருக்கிறேன் என அதில் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.