திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்!எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்!திருவொற்றியூரில் பள்ளி மாணவா் கொலை: 12 பேர் கைதுதேவ்தத் படிக்கல் சதம், கே.எல்.ராகுல் அரைசதம்; முதல் நாளில் இந்திய அணி 288 ரன்கள் குவிப்பு!முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சு
/

யோக முத்திரை

பெண்களின் உடல்நலமும் மனநலமும் பேணிக் காக்கப்படவேண்டும்.

News image
Updated On :15 ஆகஸ்ட் 2026, 10:08 pm IST

மு.வெங்கடேசன்

பெண்களின் உடல்நலமும் மனநலமும் பேணிக் காக்கப்படவேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் ஈன்றெடுக்கும் குழந்தைகளும் ஆரோக்கியமாக இருப்பர். அதனால்தான் 'பெண்கள் நலனே குடும்ப நலன்' என்பார்கள். இன்று பெண்களுக்குரிய பெரிய பிரச்னைகளில் ஒன்று சினைப்பை நீர்க்கட்டிகள் (பி.சி.ஓ.டி.). இதனால் ஒழுங்கற்ற மாத

விடாய், அடி வயிற்று வலி, கருவுறுதலில் சிக்கல் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகின்றன.

ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி அருளிய அஷ்டாங்க யோகப் பயிற்சியை கடந்த 38 ஆண்டுகளுக்கு மேலாக மேற்கொண்டு வரும் யோகக் கலைமாமணி பெ. கிருஷ்ணன் பாலாஜி, சென்னை மாங்காட்டில் உள்ள பதஞ்சலி மகரிஷி யோகாலயம் டிரஸ்ட் மூலம் ஞாயிற்றுக்கிழமைகள்தோறும் மக்களுக்கு இலவசமாகப் பயிற்றுவித்து வருகிறார். சினைப்பை நீர்க்கட்டிகள் (பி.சி.ஓ,டி.) பிரச்னைக்கு யோக சாஸ்திரத்தில் உள்ள தீர்வு குறித்து அவர் கூறுகிறார்:

'யோக சாஸ்திரத்தில் சினைப்பை நீர்க்கட்டிகள் (பி.சி.ஓ.டி.) வராமல் தடுக்கும் எளிய யோகாசனங்கள், முத்திரைகள் உள்ளன. இந்த யோக முத்திரையை பெண்கள் மாதவிடாய்க் காலத்தில் நான்கு நாள்கள் செய்ய வேண்டாம். மற்ற நாள்களில் காலை, மாலை சாப்பிடும் முன்பாக வெறும் வயிற்றில் செய்யவும். தரையில் ஒரு பாய் (மேட்) விரித்து சுடிதார், பேன்ட்-டி.சர்ட் உள்ளிட்ட உங்களுக்கு சௌகரியமான உடையணிந்து நிதானமாகச் செய்யவும்.

பச்சிமோஸ்தாசனம் செய்யும் முறை

விரிப்பில் நேராக அமரவும். இரு கால்களையும் நீட்டவும். கைகளை தலைக்கு மேல் உயர்த்தி, மெதுவாகக் குனிந்து இரு கைகளால் கால் பெருவிரல்களைத் தொடவும். சாதாரண மூச்சில் பத்து விநாடிகள் இருக்கவும். பின் சாதாரண நிலைக்கு வரவும். இதேபோல் மூன்று முறை செய்ய வேண்டும்.

சூன்ய முத்திரை

விரிப்பில் நிமிர்ந்து அமரவும். இரு கைகளிலும் நடு விரலை மடித்து, அதன் மேல் கட்டை விரலை வைக்கவும். மற்ற விரல்கள் தரையை நோக்கி இருக்கட்டும். இரண்டு நிமிடங்கள் காலை, மாலை செய்யவும்.

ஆகாய முத்திரை

விரிப்பில் நிமிர்ந்து அமரவும். இரு கைகளிலும் நடுவிரல், பெருவிரல் நுனியை இணைக்கவும். மற்ற விரல்கள் தரையை நோக்கி இருக்கட்டும். இரண்டு நிமிடங்கள் காலை, மாலை சாப்பிடுமுன் செய்யவும்.

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் பலரும் வேலைக்குச் செல்கிறார்கள். எனவே யோகாவுக்கு அவர்களால் அதிக நேரம் செலவிடமுடியவில்லை.

தினமும் காலை, மாலை பத்து நிமிடம் மேற்குறிப்பிட்ட பயிற்சியைச் செய்து, சினைப்பை நீர்க்கட்டிகள் வராமல் தடுக்கலாம். காலை 5 மணிக்கு எழுந்து, இரவு 9.30 மணிக்கு உறங்கச் செல்லவேண்டும். மாணவப் பருவத்திலேயே பெண்கள் இந்த யோகாசனங்களையும், முத்திரைகளையும் செய்துவந்தால் சினைப்பை நீர்க்கட்டிகள் (பிசிஓடி) வராமல் தடுக்கலாம். அவர்கள் வாழ்க்கையும் வளமாக, நலமாக இருக்கும்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.