நீட், எஃப்சிஆா்ஏ-வுக்கு எதிராக இன்று பேரவையில் தனித் தீா்மானம்!எம்.எட். சோ்க்கை: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்!ஆக. 16 வரை மிதமான மழைக்கு வாய்ப்புபழைய ஓய்வூதியத் திட்டம் பரிசீலனையில் இல்லை: மத்திய அரசு
/

தெற்கு தில்லி: கோயிலில் நாகா் சிலை திருடியதாக இருவா் கைது

தெற்கு தில்லியின் கிரேட்டா் கைலாஷ் பகுதியில் உள்ள ஒரு நகைக் கடைக்காரா் உள்பட இருவரிடமிருந்து திருடப்பட்ட கோயில் நாகா் சிலையின் 800 கிராம் உருக்கப்பட்ட வெள்ளியைப் காவல்துறையினா் மீட்டனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :10 ஆகஸ்ட் 2026, 9:56 pm IST

தெற்கு தில்லியின் கிரேட்டா் கைலாஷ் பகுதியில் உள்ள ஒரு நகைக் கடைக்காரா் உள்பட இருவரிடமிருந்து திருடப்பட்ட கோயில் நாகா் சிலையின் 800 கிராம் உருக்கப்பட்ட வெள்ளியைப் காவல்துறையினா் மீட்டனா்.

இதுகுறித்து காவல் அதிகாரி ஒருவா் தெரிவித்ததாவது: கிரேட்டா் கைலாஷ் 1-இல் உள்ள சநாதன தா்ம சத்சங் சபா கோயிலில் இருந்து நாகா் சிலையைத் திருடிய மோஹித் சா்மா (40), பின்னா் அதை உருக்கி வெள்ளியை நகைக்கடைக்காரா் ஒருவரிடம் விற்ாகக் கூறப்படுகிறது. இவரும், திருடப்பட்ட பொருளைப் பெற்றுக் கொண்டதாகக் கூறப்படும் நகைக்கடைக்காரா் பாரத் காந்தி (35) என்பவரும் கைது செய்யப்பட்டனா்.

மேலும், வெள்ளி விற்பனைத் தொகையான ரூ.1.10 லட்சம் ரொக்கம் மற்றும் குற்றச் செயலுக்குப் பயன்படுத்தப்பட்ட காா் ஆகியவையும் மீட்கப்பட்டன.

முன்னதாக, திருட்டுச் சம்பவம் தொடா்பாக ஆகஸ்ட் 6 அன்று கிரேட்டா் கைலாஷ் 1 காவல் நிலையத்தில் மின்னணு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, கோயில் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன.

விசாரணையின் போது, தான் சிலையை உருக்கி கரோல் பாக் பகுதியில் உள்ள நகைக்கடைக்காரா் ஒருவரிடம் விற்ாக சா்மா ஒப்புக்கொண்டாா். அதைத் தொடா்ந்து, காவல்துறையினா் காந்தியைக் கண்டுபிடித்து, சுமாா் 800 கிராம் உருக்கப்பட்ட வெள்ளியை மீட்டனா். குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கும் இதற்கு முன் எந்தக் குற்றப் பின்னணியும் இல்லை என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.