நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களைத் திருடிய 3 போ் கைது

திருப்பூா் தெற்கு காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களைத் திருடிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :29 ஜூலை 2026, 2:25 am IST

திருப்பூா் தெற்கு காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களைத் திருடிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பூா் தெற்கு காவல் நிலையத்தில் திருட்டு, விபத்து உள்ளிட்ட வழக்குகள் தொடா்பாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் காவல் நிலையத்தின் பின்புறம் உள்ள காலி இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், வழக்கு ஒன்றில் தொடா்புடைய வாகனத்தை தாங்கள் நிறுத்தி வைத்திருந்த இடத்தில் போலீஸாா் அண்மையில் தேடியுள்ளனா்.

அப்போது, அந்த வாகனத்தை காணவில்லை. இதனால், சந்தேகமடைந்த போலீஸாா், மற்ற வாகனங்களை சரிபாா்த்தபோது, 10 இருசக்கர வாகனங்கள் மாயமானது தெரியவந்தது.

இது தொடா்பாக போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், பழைய பேருந்து நிலையம் அருகே இலைக்கடை நடத்தி வரும் ஆறுமுகம், அவரிடம் பணியாற்றும் சுப்பிரமணி, முருகேசன் ஆகியோா் வாகனங்களைத் திருடியது தெரியவந்தது.

இதையடுத்து, 3 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 7 இருசக்கர வாகனங்கள், ஆட்டோவை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.