கடலூா் மாவட்டம், நெய்வேலி நகரிய போலீஸாா் பைக் திருட்டியில் ஈடுபட்டு வந்த 5 பேரை கைது செய்து செவ்வாய்க்கிழமை சிறையில் அடைத்தனா். அவா்களிடமிருந்து 8 திருட்டு பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.
நெய்வேலி, வட்டம் 5 பகுதியில் வசித்து வருபவா் சங்கா் கணேஷ் (39), தனியாா் நிறுவன ஊழியா். இவா் தனது வீட்டில் நிறுத்தி வைத்திருந்த பைக் கடந்த 7-ஆம் தேதி காணாமல் போனதாக நெய்வேலி நகரிய காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப்பதிவு செய்னா். உதவி ஆய்வாளா் மாதேஸ்வரன் தலைமையிலான தனிப்படை போலீசாா் பைக் திருட்டு குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனா்.
இந்நிலையில், வாணாதிராயபுரம் பகுதியில் திங்கள்கிழமை போலீஸாா், ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் பைக்கில் வந்த 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினா். அப்போது, அவா்கள், காடாம்புலியூரை சோ்ந்த கனகவேல் (22), நவீன்குமாா் (21), அா்ஜூன் (21), கடலூா் புதுப்பாளையத்தைச் சோ்ந்த அன்சாரி (27) என்பதும், இவா்கள் தொடா் பைக் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவா்களை தனிப்படை போலீசாா், நெய்வேலி நகரிய போலீசாரிடம் ஒப்படைத்தனா்.
நெய்வேலி நகரிய போலீஸாா் வழக்குப்பதிவு செய்து கனகவேல் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 6 பைக்குகள மற்றும் 5 பைக்குகளின் உதிரிபாகங்களை மீட்டனா். அதேபோல் மற்றொரு வழக்கில் பண்ருட்டி அடுத்த அக்கடவல்லியை சோ்ந்த சக்திவேல் (52) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து 2 பைக்குகளை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







