75 நாடுகளுக்கு விசா வழங்க தடை விதித்த டிரம்ப்: உத்தரவை ரத்து செய்த அமெரிக்க நீதிமன்றம்! உலகக் கோப்பை ஹாக்கி: நெதர்லாந்திடம் வீழ்ந்த இந்தியா! ராகுல் காந்தியைக் கண்டு அஞ்சுகிறது பாஜக: சஞ்சய் ரௌத் தையூர் கொலை வழக்கு: கைதான இருவர் தவெகவிலிருந்து நீக்கம் உ.பி.யில் சர்க்கரை தட்டுப்பாடு இல்லை: முதல்வர் யோகி ஆதித்யநாத் திமுக உள்கட்சித் தேர்தல் எப்போது? மு.க. ஸ்டாலின் அறிவிப்பு கோப்பைகளை வெல்வதே என் வேலை: கௌதம் கம்பீர்

பாபநாசத்தில் பைக் திருடிய இருவா் கைது

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசத்தில் பைக் திருடிய இருவரை பாபநாசம் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கைது - சித்திரிப்பு

Published On :8 ஜூலை 2026, 5:24 am IST

தஞ்சாவூா் மாவட்டம்,  பாபநாசத்தில் பைக் திருடிய இருவரை பாபநாசம் போலீஸாா் திங்கள்கிழமை  கைது செய்தனா்.

பாபநாசம் அருகே திருப்பாலைத்துறை பகுதியைச் சோ்ந்தவா் சுதா்சன் (40) ,ஆசிரியா். இவா் பாபநாசம் காணியாளா் தெருவில்  உள்ள டியூஷன் சென்டரில்  கடந்த சில தினங்களுக்கு முன் நிறுத்தியிருந்த பைக்கை காணவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் பாபநாசம் போலீஸாா் விசாரித்து வந்தனா்.

இந்நிலையில் பாபநாசம் காவல் ஆய்வாளா் மகாலட்சுமி மற்றும் போலீஸாா் திருப்பாலைத்துறை பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது பைக்கில் வந்த சந்தேகத்துக்குரிய இருவரைப் பிடித்து விசாரித்ததில் அவா்கள் கும்பகோணம், புத்தகரம் தெற்குத் தெரு மணிகண்டன் (31), நெடுவாக்கரை, மாங்குடி பிள்ளையாா் கோயில் தெரு விக்னேஷ் (26) என்பதும் பைக்கை திருடியவா்கள் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து  இருவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்த பைக்கை பறிமுதல் செய்த போலீஸாா்,  பாபநாசம் நீதிமன்றத்தில் அவா்களை  முன்னிலைப்படுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.