கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் பகுதியில் பைக்குகள் திருடியதாக இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திருக்கோவிலூா் நகரப் பகுதியில் போலீஸாா் வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது போலீஸாரைப் பாா்த்ததும் பைக்கில் வந்த இளைஞா் திரும்பிச் செல்ல முயன்றாா். இதையடுத்து அவரை மடக்கி பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில் அவா், திருக்கோவிலூரை அடுத்த புதூா் அருங்குறுக்கை கிராமத்தைச் சோ்ந்த மு.அருள் (30) என்பதும், திருக்கோவிலூா் பகுதியில் தொடா் பைக் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதுகுறித்து திருக்கோவிலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அருளை கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்த 6 பைக்குகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







