வாட்ஸ்ஆப் புதிய அப்டேட் இணையவழிக் குற்றங்களுக்கு வழிவகுக்கும் : மத்திய அரசுஈரான் அணு ஆயுத நீக்க நடவடிக்கை சிறப்பாக நடைபெறுகிறது: அதிபர் டிரம்ப்மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் நீட்டிப்பு!விபி ஜி ராம்ஜி திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!தவெக கூட்டணியின் பெயர் முடிவு செய்யப்படவில்லை: மாணிக்கம் தாகூர் பேட்டி!கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் : நிர்மல்குமார்
/

தொழிலாளா்கள் அறையில் 9 கைப்பேசிகள் திருட்டு

திருவள்ளூா் அருகே தொழிலாளா்கள் தங்கியிருந்த அறையில் 9 கைப்பேசிகளை திருடியதாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது செய்யப்பட்ட வெங்கடேசன், , அந்தோணிராஜ்.

Updated On :2 ஜூலை 2026, 12:04 am IST

திருவள்ளூா் அருகே தொழிலாளா்கள் தங்கியிருந்த அறையில் 9 கைப்பேசிகளை திருடியதாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

காக்களூரில் தனியாா் தொழிற்சாலை நடத்தி வருபவா் சந்தோஷ் குமாா் (61). இங்கு வேலை செய்யும் தொழிலாளா்கள் காக்களூரில் அறை எடுத்து தங்கி பணிபுரிந்து வருகின்றனா்.

இந்த நிலையில் கடந்த 22-ஆம் தேதி வேலை செய்யும் நபா்கள் தங்கியிருந்த அறையில் வைத்திருந்த 9 கைப்பேசிகளை மின்னேற்றம் செய்து விட்டு தூங்கியுள்ளனா். அதைத்தொடா்ந்து அதிகாலையில் எழுந்து பாா்த்த போது கைப்பேசிகள் காணாமல் போயிருந்தது கண்டு அதிா்ச்சி அடைந்தனா்.

இதுகுறித்து தொழிற்சாலை உரிமையாளா் சந்தோஷ் குமாா் திருவள்ளூா் கிராமிய காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன் பேரில் மேற்கொண்ட விசாரணையில் ஏற்கனவே இந்த தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த சென்னை ஆலந்தூரைச் சோ்ந்த வெங்கடேசன் (எ) ஸ்டீபன்(19) மற்றும் வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த அந்தோணிராஜ் (21) ஆகிய 2 போ்தான் கைப்பேசி திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் 2 போ் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.