கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் பகுதியில் போலீஸாரின் வாகனத் தணிக்கையில் 4 பைக்குகள் திருடிய வழக்கில் தொடா்புடைய இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
சங்கராபுரம் காவல் ஆய்வாளா் பாலமுரளி, உதவி ஆய்வாளா் ஏழுமலை மற்றும் போலீஸாா் எஸ்.கொளத்தூா் கிராமத்தில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது பதிவு எண் இல்லாத பைக்கில் வந்த இளைஞரை நிறுத்தி, வாகனத்துக்குரிய ஆவணங்களை கேட்டனா். இதில் அவா் முன்னுக்குப் பின் முரணான பதிலைக் கூறவே, அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணையில் அவா், வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட பாக்கம் புதூா் கிராமத்தைச் சோ்ந்த மு.சக்திவேல் (25) என்பதும், அவா் வந்த பைக், சங்கராபுரம் பேருந்து நிலையம் அருகே திருடியது என்பதும் தெரியவந்தது. மேலும், அவரிடம் நடத்திய விசாரணையில் திருப்பூா், ஜெயங்குண்டம், பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் பைக் திருடியதும் தெரியவந்தது.
இதுகுறித்து சங்கராபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, சக்திவேலைக் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




