தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பிறந்தநாள் முதலே, நடிகை த்ரிஷாவின் இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிடப்படும் அனைத்தும் மக்களுக்கு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
முதல்வர் ஜோசப் விஜய் பிறந்தநாள் முடிந்ததும், கோவாவில் நடிகை குஷ்பு மகள் திருமண கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டன.
திருமணத்துக்கு முந்தைய நாளே கோவா சென்று நடிகை த்ரிஷா தங்கியிருந்தார். அன்று முதல் நான்கு நாள்களுக்கு அவர்கள் திருமணக் கொண்டாட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
குஷ்பு மகள் அவந்திகா திருமணத்தில் நடிகை தமன்னாவும் பங்கேற்றிருந்தார். த்ரிஷாவும் தமன்னாவும் திருமணத்தில் ஒன்றாக சிரித்துப் பேசி பொழுதைக் கழித்தனர். அது மட்டுமல்லாமல், பல திரை நட்சத்திரங்களும் திருமண விழாவில் பங்கேற்றிருந்தனர்.
இந்த நிலையில், நேற்று கோவாவில் எடுத்த புகைப்படங்களை த்ரிஷா பகிர்ந்திருந்தார்.
இன்று, குஷ்பு, நடிகை த்ரிஷாவுடன் எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்திருந்த நிலையில், அது குறித்து த்ரிஷா "முழுதாக நான்கு நாள்களுக்கு எங்களை மிகுந்த அன்பிலும் மகிழ்ச்சியிலும் திளைக்கச் செய்ததற்கு என் குஷ் (Khush) மற்றும் சுந்தர் சார் ஆகியோருக்கு நன்றி. திருமணக் கொண்டாட்டங்கள் முடிந்த பிறகும் அந்த உணர்விலிருந்து இன்னும் மீள முடியவில்லை. என் அன்பிற்குரிய டாமி (Tammy), நாம் அடிக்கடி சந்தித்துப் பேச வேண்டும்." என்று பதிவிட்டிருக்கிறார்.

முன்னதாக, நடிகை குஷ்பு, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண நிகழ்வின்போது, நடிகை த்ரிஷாவைக் கட்டியணைத்துக் கொஞ்சும் புகைப்படத்தைப் பகிர்ந்து அழகி என்று இதய எமோஜியை வைத்து பகிர்ந்திருந்தார்.

இதில், குஷ்பு தன்னுடைய ஸ்டோரில் பகிர்ந்திருந்த புகைப்படத்துக்கு த்ரிஷா கருத்திட்டிருந்தார். இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் திருமண நிகழ்வில், சுந்தர் சி, தமன்னா, த்ரிஷா, குஷ்பு இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அதற்கு த்ரிஷா அளித்த பதிவில், "நான்கு நாள்கள் முழுவதும் எங்களை அன்பிலும் மகிழ்ச்சியிலும் திளைக்கச் செய்ததற்கு என் அன்பு குஷ்பூ மற்றும் சுந்தர் சார் ஆகியோருக்கு நன்றி. திருமண கொண்டாட்டங்களின் உற்சாகம் இன்னும் என்னை விட்டு அகலவில்லை. என் இனிய தமன்னா, நாம் அடிக்கடி சந்தித்துப் பேச வேண்டும்," என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இது அவரது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
நடிகை த்ரிஷாவுக்கு, குஷ்பு மகள் திருமணத்தில் கலந்துகொண்டு திரும்பியது முதலே திருமண ஏக்கம் வந்துவிட்டதாகவும், த்ரிஷா, சேலை அணிந்து பகிர்ந்திருந்த புகைப்படங்களைப் பார்த்து த்ரிஷாவுக்கு கல்யாணக்களை வந்துவிட்டதாகவும் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.
Summary
Unable to shake off the wedding celebration mood... Trisha's melancholic post.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










