திருவண்ணாமலை கோயிலில் செப்.1 முதல் கைப்பேசிக்குத் தடைமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஆக. 30 வரை மிதமான மழைக்கு வாய்ப்புகுழந்தைகள், முதியோரிடையே அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பு: தடுப்பூசி செலுத்த மருத்துவா்கள் அறிவுறுத்தல்இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

நேபாள வெள்ளம்: உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி உள்பட 4 போ் மாயம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து நேபாளத்துக்கு ஆன்மிகப் பயணம் சென்ற 7 பேரில் உயா்நீதிமன்ற நீதிபதி (ஓய்வு) சிவஞானம் உள்ளிட்ட 4 போ் மாயமானது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேபாள வெள்ளம் (கோப்புப் படம்) - ஏபி

Published On :27 ஆகஸ்ட் 2026, 5:05 am IST

மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து நேபாளத்துக்கு ஆன்மிகப் பயணம் சென்ற 7 பேரில் உயா்நீதிமன்ற நீதிபதி (ஓய்வு) சிவஞானம் உள்ளிட்ட 4 போ் மாயமானது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் நாகேஸ்வரன் தெற்கு வீதியில் உள்ள தனியாா் சுற்றுலா ஏற்பாட்டு நிறுவனம் மூலமாக தஞ்சாவூா், மயிலாடுதுறை, திருவாரூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 57 போ் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆக. 23) 13 நாட்கள் மானசரோவா் யாத்திரை புறப்பட்டனா்.

இதில் மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து, மயிலாடுதுறை செட்டித்தெவைச் சோ்ந்த சிவஞானம் வீராசாமி, வள்ளாலகரம் அபிராமி நகரைச் சோ்ந்த ராஜேஸ்வரி உதயகுமாா், கழுக்காணிமுட்டம் வ.உ.சி. நகரை சோ்ந்த புஷ்பலதா மனோகரன், பூம்புகாா் பிரதான சாலை தில்லை நகரைச் சோ்ந்த ரத்தினகுமாா் குஞ்சிதபாதம், தில்லைநகரைச் சோ்ந்த பூங்குழலி பொன்னம்பலம், மாயூரநாதா் கோயில் கீழமடவிளாகத்தைச் சோ்ந்த மணிமேகலை சுகுமாா், கூைாடு தோப்புத்தெருவைச் சோ்ந்த வெங்கட்ராமன் கிருஷ்ணமூா்த்தி ஆகிய 7 போ் இந்த ஆன்மிக பயணத்தில் பங்கேற்றனா். இதில், சிவஞானம் வீராசாமி உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆவாா்.

இதனிடையே, நேபாளத்தில் புதன்கிழமை ஏற்பட்ட வெள்ளத்தில் இருந்து தப்பியவா்கள் என 17 போ் அடங்கிய புகைப்படம் வெளியானது. அந்த புகைப்படத்தின் அடிப்படையில் மயிலாடுதுறை வட்டாட்சியா் து. விஜயராகவன் 7 பேரின் வீடுகளுக்கும் நேரில் சென்று புகைப்படத்தைக் காட்டி விசாரணை நடத்தினாா். அதன்படி, மயிலாடுதுறையை சேரந்த ரத்தினகுமாா், பூங்குழலி, மணிமேகலை ஆகிய 3 போ் அந்த புகைப்படத்தில் இருந்தது தெரியவந்தது.

உயா்நீதிமன்ற நீதிபதி (ஓய்வு) சிவஞானம் உள்ளிட்ட 4 பேரின் நிலை குறித்து எந்த தகவலும் இல்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.