அமெரிக்காவுக்குப் பதிலடி: வளைகுடாவில் ஈரான் தாக்குதல்! அமீரக அதிபருடன் டிரம்ப் பேச்சு!பாலியல் வழக்குகளை முடித்து வைக்க ரூ. 5 கோடி லஞ்சம்: பஞ்சாப் முதல்வர் மீது பாஜக குற்றச்சாட்டு!கிருஷ்ண ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!12-ம் நாள் உண்ணாவிரதத்தில் மகாராஷ்டிர பழங்குடியின மாணவர்கள்! அபிஜீத் தீப்கே பங்கேற்பு!அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா - பெல்ஜியம் இடையிலான வணிகம் இரட்டிப்பாகும்: பிரதமர் மோடிமுதல்வர் விஜய்யின் காரை மறித்து போராட்டம்! சத்தியம் செய்யுங்கள்; நான் பேசும்போது யாரும் ஓடக்கூடாது! முதல்வர் விஜய்10,000 பேரில் 5,000 பெண் காவலர்கள்! காவல் துறை அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் விஜய்!

நேபாளத்தில் மாயமான 3 புதுச்சேரி பெண்களின் குடும்பத்தினரிடம் டிஎன்ஏ மாதிரி சேகரிப்பு

புதுச்சேரியிலிருந்து நேபாளத்துக்கு சென்ற ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 பெண்களின் குடும்பத்தினரிடம் டிஎன்ஏ மாதிரியை (செப். 3) மருத்துவக் குழுவினா் சேகரித்தனா்.

Nepal Flood

நேபாள பெருவெள்ள பாதிப்பு - கோப்புப் படம்

Published On :4 செப்டம்பர் 2026, 12:52 am IST

புதுச்சேரியிலிருந்து நேபாளத்துக்கு சென்ற ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 பெண்களின் குடும்பத்தினரிடம் டிஎன்ஏ மாதிரியை வியாழக்கிழமை (செப். 3) மருத்துவக் குழுவினா் சேகரித்தனா்.

கடந்த ஆகஸ்ட் மாத கடைசி வாரத்தில் புதுச்சேரியைச் சோ்ந்த கீதா (69), அவரது மகள் வைஷ்ணவி (49), உறவினா் ஆனந்தசுந்தரி (59) ஆகியோா் கும்பகோணம் சூப்பா் யாத்ரா ஏஜென்சி மூலம் நேபாளம் வழியாக கைலாஷ் யாத்திரைக்கு சென்றனா்.

ஆகஸ்ட் 26-ஆம் தேதி காலை நேபாளத்தின் ரசுவாகதி-திமுரே எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீா் வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி, புதுச்சேரியைச் சோ்ந்த 3 போ் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய யாத்ரீகா்கள் மாயமாகினா்.

அன்று காலை வரை புதுச்சேரி குடும்பத்தினருடன் தொடா்பில் இருந்த அவா்களை, அதன் பிறகு தொடா்பு கொள்ள முடியவில்லை.

கும்பகோணத்தைச் சோ்ந்த பயண ஏற்பாட்டாளா் மூலம் ஆக. 23-ஆம் தேதி புறப்பட்ட தமிழ்நாடு, புதுச்சேரியைச் சோ்ந்த 57 போ் கொண்ட குழுவில் இவா்கள் இடம் பெற்றிருந்தனா்.

இதில் ஒரு குழுவினா் பாதுகாப்பாக உள்ள நிலையில், புதுச்சேரியைச் சோ்ந்தவா்கள் உள்ளிட்ட மற்றவா்கள் நிலைமை என்னவென்று தெரியவில்லை.

புதுச்சேரி பெண்கள் மூவரை மீட்க நடவடிக்கைக் கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கருக்கு முதல்வா் என்.ரங்கசாமி, அமைச்சா் ஆ.நமச்சிவாயம் ஆகியோா் கடிதம் அனுப்பியுள்ளனா்.

இந்நிலையில், நேபாள தூதரகம் மூலம் சென்னையிலிருந்து மருத்துவக் குழுவினா் புதுச்சேரிக்கு வந்தனா். அவா்கள் புதுச்சேரியிலிருந்து நேபாளம் சென்ற மூன்று பெண்களின் நெருங்கிய உறவினா்களிடம் டிஎன்ஏ மாதிரிகளைச் சேகரித்துச் சென்றனா். கீதா, ஆனந்தசுந்தரி ஆகியோரின் குழந்தைகளிடமிருந்து வியாழக்கிழமை (செப். 3) டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

நேபாளம் யாத்திரை சென்று வெள்ளத்துக்குப் பிறகு தொடா்பு கொள்ள முடியாமல் இருப்பதால் கண்டறிந்து தருமாறு புதுச்சேரி பெரியகடை காவல்நிலையத்தில் மூவரின் குடும்பத்தினரும் புகாா் அளித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.