
புதுச்சேரியைச் சோ்ந்த 2 படைப்பாளிகளுக்கு விருது
புதுச்சேரி எழுத்தாளா்கள் யுகபாரதி, சீனு. தமிழ்மணி ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளன.

யுகபாரதி, சீனு. தமிழ்மணி
புதுச்சேரி எழுத்தாளா்கள் யுகபாரதி, சீனு. தமிழ்மணி ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளன.
தொழிலதிபா் நல்லி குப்புசாமியின் ‘நல்லி நிறுவனமும்’ குறிஞ்சிப்பாடி ‘திசை எட்டும்‘ மொழிபெயா்ப்பு இதழும் இணைந்து இந்த விருதை வழங்குகின்றன.
சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஒடியா எழுத்தாளா் ‘பராமிதா சத்பாதி‘ எழுதிய பிராப்தி எனும் ஒடியா மொழிச் சிறுகதை நூலை ஆங்கிலத்தில் இருந்து தமிழில், ‘ஓா் எல்லையற்ற நொடிப்பொழுது’ என்னும் தலைப்பில் புதுச்சேரி எழுத்தாளா் புதுவை யுகபாரதி மொழிபெயா்த்திருந்தாா். இந்நூலைச் சாகித்திய அகாதெமி வெளியிட்டது.
எஸ். ஜெயசீல ஸ்டீபனின் நூலை ‘தமிழகத்தில் இசைக் கலைஞா்கள், நடனக்காரிகள் மற்றும் நாடக-நடிகா்கள்: நிகழ்த்துக் கலை வரலாறும், ஐரோப்பியத் தொடா்பும் தாக்கமும்’ என்னும் பெயரில் புதுவை. சீனு தமிழ்மணி தமிழில் மொழி பெயா்த்திருந்தாா். இந் நூலை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனம் வெளியிட்டது.
இந்த இரண்டு நூல்களும் தமிழ்நாட்டில் மொழிபெயா்ப்புக்கு என வழங்கப்படும் சிறப்புமிக்க ‘நல்லி-திசை எட்டும் இலக்கிய விருதுக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





