உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,344 ஆக உயர்வு! நோய்கள் பரவும் அபாயம்!

நேபாள பெருவெள்ளத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 1,344 ஆக உயர்ந்தது குறித்து...

Nepal death toll

நேபாள பெருவெள்ளத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,344 ஆக உயர்வு - படம் - ஏபி

Published On :5 செப்டம்பர் 2026, 10:14 am IST

நேபாள பெருவெள்ளத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை சனிக்கிழமை (செப். 5) 1,344 ஆக உயர்ந்ததாக நேபாள காவல்துறை அறிவித்துள்ளது.

திபெத் - நேபாள எல்லையில் பெரும் பனிப்பாறைச் சரிவால் லெண்டே நதியில் கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி ஏற்பட்ட பெருவெள்ளம் நேபாளத்தின் போடே கோஷி நதியில் சீறிப்பாய்ந்தது.

சகதியுடன் பல அடி உயரத்துக்கு பெருக்கெடுத்த வெள்ளத்தில் கரையோர கிராமங்கள், சிறு நகரங்கள் அடியோடு அழிந்தன. வீடுகள், கட்டடங்கள், வாகனங்கள், பாலங்கள், சாலைகள், நீா்மின் நிலையங்கள், இதர உள்கட்டமைப்புகள் அடித்துச் செல்லப்பட்டன.

இந்தப் இயற்கைப் பேரிடரில் சிக்கி இதுவரை 1,344 பேர் பலியான நிலையில், காணாமல் போன 4800-க்கும் மேற்பட்டோரைத் தேடும் பணி தொடர்ந்து வருகிறது.

இதைத் தொடர்ந்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சில பகுதிகளில் நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் பிதூரும் ஒன்றாகும். பிதூரில் குடிப்பதற்காகப் பயன்படும் 15 நீர் நிலைகள் பாக்டீரியாவால் அசுத்தமடைந்திருப்பது கண்டறியப்பட்டதாக செய்தி வெளியானது.

இதையடுத்து தற்போது, ​​சுமார் 1,00,000 மக்களுக்கு காலரா தடுப்பூசியும், 75,000-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசியும் வழங்குவது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

இந்தப் பேரிடருக்குப் பிறகு, தொற்றும் நோய்கள், தொற்றா நோய்கள் மற்றும் பூச்சிகளால் பரவும் நோய்களின் அபாயம் அதிகரிக்கக்கூடும் என்று பொது சுகாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளதாக நேபாள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

The Nepal Police announced on Saturday (Sept. 5) that the death toll from the massive floods in Nepal had risen to 1,344.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.