
நேபாள வெள்ளம்! 9 நாள்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட இருவர்!
நேபாள நீர்மின் சுரங்கத்திலிருந்து இருவர் உயிருடன் மீட்கப்பட்டது பற்றி...

சுரங்கத்தில் உயிருடன் இருவர் மீட்பு - AP
நேபாள வெள்ளத்தில் உருகுலைந்த நீா்மின் சுரங்கத்துக்குள் சிக்கியவர்களில் முதல்கட்டமாக இருவர் உயிருடன் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளனர்.
நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக பலத்த உயிா்ச்சேதங்களுடன் பேரழிவு ஏற்பட்டது. இன்று காலை நிலவரப்படி, நேபாள வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,290 ஆக உயர்ந்துள்ளது.
இந்த வெள்ளத்தில் போடே கோஷி, திரிசூலி நதிகளின் குறுக்கே இருந்த நீா்மின் நிலையத்தின் சுரங்கங்கள் உருகுலைந்தன. இந்த நீர்மின் நிலையங்களில் 150-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதனைத் தொடர்ந்து, திரிசூலி நீா்மின் நிலையத்தின் சுரங்கத்துக்குள் சிக்கியுள்ளவர்கள் மீட்கும் பணியில் கடந்த 9 நாள்களாக நேபாள ராணுவம் ஈடுபட்டுள்ளது. அவர்களுடன் இந்திய சுரங்க மீட்பு தொழில்நுட்ப நிபுணா் குழுவினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

உயிருடன் மீட்கப்பட்ட கபீர் மகாராஜன் - ஏபி
இந்த நிலையில், 9 நாள்களுக்குப் பிறகு சுரங்கத்துக்குள் சிக்கியிருந்த இருவரை இன்று காலை நேபாள ராணுவத்தினர் உயிருடன் மீட்டுள்ளனர்.
அவர்கள் சஞ்சய் ஷா மற்றும் கபீர் மகாராஜன் என திரிசூலி நீா்மின் திட்ட அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். இருவரையும் ஹெலிகாப்டர் மூலம் ராணுவ மருத்துவமனைக்கு மருத்துவக் குழுவினர் அழைத்துச் சென்றுள்ளனர்.
இதையடுத்து, சுரங்கத்துக்குள் சிக்கியிருக்கும் மேலும் 150 பேரை மீட்கும் பணியை நேபாள ராணுவத்தினர் விரைவுப்படுத்தியுள்ளனர்.

உயிருடன் மீட்கப்பட்ட சஞ்சய் ஷா - ஏபி
சுரங்கத்துக்குள் சிக்கியிருப்பவர்கள் சுவாசிக்க அதிகளவில் ஆக்சிஜன் வாயுவையும் குழாய் மூலம் நேபாள மீட்புக் குழுவினர் செலுத்தி வருகின்றனர்.
9 நாள்களுக்குப் பிறகு இருவர் உயிருடன் மீட்கப்பட்டிருக்கும் சம்பவம், நேபாள வெள்ளத்தில் காணாமல் போன ஆயிரக்கணக்கானவர்களின் குடும்பத்துக்கு நம்பிக்கை அளித்துள்ளது.
Summary
Nepal Floods! Two rescued alive from a tunnel after 9 days!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






