
நேபாள வெள்ளம்: பலி எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு! உ.பி. ஆற்றில் சடலங்கள் மீட்பு!
நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் சடலங்கள் உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஆற்றில் மீட்கப்பட்டுள்ளன...

நேபாள வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு... - AP
நேபாள வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திபெத்தில் உள்ள பனிப்பாறைகள் உடைந்து நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தின் போடே கோஷி ஆற்றில், கடந்த புதன்கிழமை (ஆக. 27) திடீரென வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில், அங்குள்ள பாலங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் அடித்துச் செல்லப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, இந்தப் பேரிடரில், இந்தியா உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான வெளிநாட்டவரைக் காணவில்லை எனக் கூறப்படும் நிலையில், அவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், நேபாள வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களில் மேலும் 132 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும்; இதன்மூலம், இந்தப் பேரிடரில் பலியானவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரித்துள்ளதாகவும், நேபாள காவல்துறையினர் இன்று அறிவித்துள்ளனர்.
இத்துடன், நேபாள வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த 2 பெண்கள் உள்பட 3 பேரின் உடல்கள் உத்தரப் பிரதேசத்தின் மஹாராஜ்கஞ்ச் மாவட்டத்திலுள்ள கண்டக் ஆற்றில் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, பலியானவர்களின் விவரங்கள் இதுவரைத் தெரியவராததால், நேபாள அதிகாரிகளுக்குத் தகவல் அளிக்கப்பட்டு அவர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
Summary
death toll from the floods in Nepal has risen to 270.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






