தனி விமானத்தில் தில்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்!
முதல்வர் விஜய் தில்லி பயணம் மேற்கொண்டுள்ளது பற்றி...

முதல்வர் ஜோசப் விஜய் - கோப்புப்படம்
சென்னையில் இருந்து தனி விமானம் மூலமாக முதல்வர் விஜய் தில்லி புறப்பட்டுச் சென்றார்.
முதல்வர் விஜய் தில்லி செல்வதற்காக, இன்று பிற்பகல் சென்னை நீலாங்கரை வீட்டில் இருந்து விமான நிலையம் வந்தடைந்தார், அங்கிருந்து அவர் தனி விமானம் மூலமாக தில்லி செல்கிறார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் தன் வரலாற்று நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக அவர் தில்லி செல்கிறார்.
காங்கிரஸ் தலைவர்கள் கார்கே, ராகுல் காந்தி, ப்ரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்கள், காங்கிரஸ் ஆளும் ஹிமாசல பிரதேம் கேரளம், தெலங்கானா, கர்நாடகம் ஆகிய மாநில முதல்வர்களும் இந்த விழாவில் பங்கேற்கவிருக்கின்றனர்.
ஏற்கெனவே அமைச்சர்கள் ராஜ்மோகன், ஆதவ் அர்ஜுனா தில்லியில் இருக்கக்கூடிய நிலையில் அமைச்சர் என். ஆனந்தும் செல்லவிருப்பதாகக் கூறப்படுகிறது.
விழாவில் கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமாரும் கலந்துகொள்ளவிருப்பதால் மேக்கேதாட்டு அணை விவகாரம் குறித்து இருவரும் பேச வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
முதல்வர் விஜய், விழாவில் கலந்துகொண்ட பின்னர் இன்று இரவு 11 மணிக்கு சென்னை திரும்புகிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
Summary
Chief Minister Vijay has left for Delhi for sonia gandhi book function
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


