ஓட்டுநர் பாலகிருஷ்ணன் உடலில் 5 ரத்த காயங்கள்! பிரேத பரிசோதனையில் தகவல்
செக்கானூரணி காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட லாரி ஓட்டுநர் மரணமடைந்த விவகாரத்தில் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது பற்றி...

லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் - DIN
மதுரை காவல் நிலையத்தில் மரணமடைந்த ஓட்டுநர் பாலகிருஷ்ணன் உடலில் 5 ரத்த காயங்கள் இருப்பதாக பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
மதுரை அருகேயுள்ள செக்கானூரணி காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட லாரி ஓட்டுநர் சனிக்கிழமை அதிகாலை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. ஓட்டுநர் தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என்று அவரது மனைவி கூறியிருந்தார்.
இந்த விவகாரத்தில் காவல் ஆய்வாளர் முத்து, தலைமைக் காவலர்கள் பழனிவேல் ராஜன், கலைச்செல்வி ஆகிய 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்தச் சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வரும் நிலையில் மேற்குறிப்பிட்ட மூவருக்கும் சம்மன் அனுப்பியுள்ளனர்.
இந்த நிலையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பாலகிருஷ்ணன் பிரேத பரிசோதனை நடைபெற்ற நிலையில் அவரது உடலில் 5 ரத்த காயங்கள் இருந்தது தெரிய வந்துள்ளது.
கழுத்திற்கு கீழே கயிறு இருந்த காயத்திற்கு அருகே ஊசியால் குத்தியது போன்ற 3 காயங்களும் அதேபோல முதுகிலும் காயங்கள் இருந்ததாக அவரது தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார்.
பாலகிருஷ்ணனின் கழுத்தின் இரு பக்கங்களிலும் சாய்வான கயிற்றுத் தடம் இருந்துள்ளது.
அதேபோல மூளையில் வீக்கமும் ரத்தக்கசிவு இருந்ததாகவும் இதயம், நுரையீரல்களில் வீக்கம் இருந்ததாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலகிருஷ்ணனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தொடர்ந்து போராட்டம், சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
Summary
Driver Balakrishnan sustained bleeding injuries in 5 places on his body; autopsy reveals
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


