சங்ககிரி: சத்யா நகரில் லாரி ஓட்டுநர் வீட்டில் 23 பவுன் தங்க நகைகள் திருட்டு
சங்ககிரியை அடுத்த சத்யா நகரில் லாரி ஓட்டுநர் வீட்டில் 23 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது குறித்து...

சங்ககிரி சத்யா நகரில் லாரி ஓட்டுநர் வீட்டில் 23 பவுன் தங்க நகைகள் திருட்டு - கோப்புப்படம்
சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த சத்யா நகரில் லாரி ஓட்டுநர் வீட்டில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 23 பவுன் தங்க நகைகளை அடையாளம் தெரியாத நபர்கள் வியாழக்கிழமை இரவு திருடிச் சென்றனர். இது குறித்து சங்ககிரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சங்ககிரியை அடுத்த சத்யா நகர் பகுதியில் வசித்து வருபவர் குப்புசாமி மகன் பழனிவேல் (47). அவர் சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத்தில் லாரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். அவருக்கு செல்லம்மாள் என்ற மனைவியும், தனஸ்ரீ என்ற மகளும் உள்ளனர். அவரது மகள் வடுகப்பட்டி மாதிரி பள்ளியில் படித்து வருகிறார். வியாழக்கிழமை வழக்கம் போல் அவர் வேலைக்கு சென்றுள்ளார். வீட்டில் அவரது மனைவி வீட்டை பூட்டி விட்டு அவரது தோழிகள் வீட்டிற்கு சென்றாராம். இரவு பழனிவேல் அவரது மனைவி, குழந்தையுடன் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 23 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டது தெரியவந்தது.
இது குறித்து பழனிவேல் சங்ககிரி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
இதுதொடர்பாக சங்ககிரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Sankari: 23 sovereigns of gold jewellery stolen from a lorry driver's house in Sathya Nagar
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


