மதுரை காவல் நிலையத்தில் லாரி ஓட்டுநர் மரணம்: வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!
செக்கானூரணி காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வந்த லாரி ஓட்டுநர், தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் வழக்கு சிபிசிஐடி -க்கு மாற்றப்பட்டுள்ளது பற்றி...

செக்கானூரணி காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வந்த லாரி ஓட்டுநர், மரணம்... - DIN
செக்கானூரணி காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வந்த லாரி ஓட்டுநர், தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் தேவாரம் அருகே அழகர் நாயக்கன்பட்டியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் மதுரையைச் சேர்ந்த நாகராஜ் என்ற ஏலக்காய் வியாபாரியிடம் ஓட்டுநராக பணியாற்றி வரும் நிலையில், கடந்த நவ. 3 ஆம் தேதி போடியில் இருந்து மதுரைக்கு லாரியில் ஏலக்காய் ஏற்றி வந்தாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வாலாந்தூர் என்ற இடத்தில் லாரி எரிந்துவிட்டதாகக் கூறி புகாரளிப்பதற்காக நேற்றிரவு மதுரை செக்கானூரணி காவல் நிலையத்திற்கு வந்துள்ளார்.
அவர் அளித்த புகாரில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரை காவல் நிலையத்திலேயே போலீசார் இரவு தங்க வைத்துள்ளனர்.
காவல் நிலைய ஆய்வாளர் அறையில் தங்க வைக்கப்பட்டிருந்தவர், இன்று காலை காவல்நிலைய கழிவறைக்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
முதற்கட்ட விசாரணையில், தான் அளித்த புகார் மூலம் தானே போலீசாரிடம் சிக்கிக் கொண்டதால் பயத்தில் பாலகிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, மதுரை மாவட்ட எஸ்.பி. தேவநாதன் நேரில் விசாரணை நடத்தி வருவதால், செக்கானூரணி காவல் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.,
காவல் நிலையத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மரணத்தின் விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக இருப்பதாக கூறி செக்கானூரணி பொதுமக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே பணியில் இருந்த ஆய்வாளர் மற்றும் 3 போலீஸாரை பணியிடை நீக்கம் செய்து தென் மண்டல ஐஜி உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில் பாலகிருஷ்ணன் காவல் மரண வழக்கு சிபிசிஐடி -க்கு மாற்றப்பட்டுள்ளது.
மேலும் காவல் நிலைய சிசிடிவி காட்சிகள் சோதனை உள்ளிட்ட தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
Summary
Lorry driver Death at Madurai Sekkanoorani police station: Case transferred to CB-CID
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

